திருமண தேதியை உறுதி செய்த புகழ் : அழைப்பிதழ் ரெடி

விஜய் டிவி நட்சத்திரங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சீரியல் ரியாலிட்டி ஷோக்கள் என தங்களது திறமையை வெளிக்காட்டி வரும் பலரும் தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைத்து ஸ்டாராக உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியின் புகழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், தற்போது தமிழகத்தில் அனைத்து மூலைகளில் அவர தெரியாத ஆள் இல்லை என்று சொல்லிவிடும் அளவுக்கு வளந்துள்ளார். மேலும் டிவி ஷோ மட்டுமல்லாது சினிமாவிலும் நடித்து வரும் புகழ் வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தார்

அதே போல் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், சமீபத்தில் வெளியான அருண்விஜயின் யானை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், சந்தானத்துடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக நாயகன் அவதாரம் எடுத்துள்ள புகழ் சூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகழ் பென்சியா என்ற பெண்ணை காதலிப்பதாக தகவல் வெளியானது இதை உறுதிப்படுத்தும் விதமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் தெரியப்படுத்தினார். மேலும் அப்போது விரைவில் தங்கள் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறியிருந்தார்.

தற்போது புகழ் பென்சியா திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களின் திருமணம் தொடர்பான அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. வரும் செப்டம்பர் 5-ந் தேதி புகழ் பென்சியா திருமணம் நடைபெற உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அழைப்பிதழை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.