இலங்கையை அடுத்து பாகிஸ்தானிலும் விலைவாசியானது கடுமையாக உச்சம் தொட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது .
குறிப்பாக அத்தியாவசிய தேவைகளாக இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையானது கடுமையான ஏற்றம் கண்டுள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக அங்கு உற்பத்தியானது பெரும் சேதம் கண்டுள்ளது. ஏற்கனவே அங்கு விலைவாசியானது கடும் உச்சத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது வெள்ளத்தால் இன்னும் கடுமையான சூழல் உருவாகியுள்ளது.
தங்கம் விலை வரும் வாரத்தில் எப்படி இருக்கும் தெரியுமா.. இதே கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!
இந்தியாவில் இருந்து இறக்குமதியா?
இதற்கிடையில் பாகிஸ்தான் அரசு விலைவாசியினை கட்டுக்குள் கொண்டு வர, தக்காளி மற்றும் வெங்காயத்தினை இந்தியாவில் இறக்குமதி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுகிழமையன்று, லாகூர் சந்தையில் தக்காளி மற்றும் வெங்காயம் விலை கிலோவுக்கு, முறையே 500 ரூபாய் மற்றும் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
விலை அதிகரிக்கலாம்
எனினும் மற்ற சந்தைகளில் இருந்ததை விட விலையானது கிலோவுக்கு 100 ரூபாய் குறைவாக இருந்ததாகவும் வியாபாரிகள் தரப்பில் கூறியுள்ளதாக பிடிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போதே விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், வரவிருக்கும் நாட்களில் காய்கறிகளின் விலையானது, இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடும் வெள்ளம்
வெள்ளம் காரணமாக பாகிஸ்தானின் முக்கிய உற்பத்தி பகுதிகளான பலுசிஸ்தான், சிந்து மற்றும் தெற்கு பஞ்சாப் பகுதிகளில், பல ஆயிரம் ஏக்கர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக காய்கறிகளின் வரத்தானது குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக விலைவாசி மேலும் உயர வாய்ப்பிருப்பதாகவும் சந்தை வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு
வரும் நாட்களில் தக்காளி, வெங்காயம் விலையானது கிலோவுக்கு 700 ரூபாயினை தாண்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உருளைக் கிழங்கு விலை ஏற்கனவே 40 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா ஆலோசனை
ஆக இந்தியாவில் இருந்து வாகா எல்லை வழியாக வெங்காயம் மற்றும் தக்காளி இறக்குமதியினை, இறக்குமதி செய்வதற்காக இந்தியா ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது லாகூர் மற்றும் பஞ்சாபின் பிற நகரங்களுக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து பெர்காம் வழியாக தக்காளி மற்றும் வெங்காயம் சப்ளை செய்யப்படுகின்றது.
தினசரி இறக்குமதி
டோர்காம் எல்லையில் தினசரி 100 டன் தக்காளி மற்றும் 30 டன் வெங்காயம், சப்ளை செய்யப்படுகின்றது. அதில் இரண்டு கன்டெய்னர்கள் தக்காளி மற்றும் ஒரு கன்டெய்னர் வெங்காயம் லாகூருக்கு தினசரி கொண்டு செல்லப்படுகின்றது. தற்போது அங்கு தேவை என்பது அதிகம் உள்ள நிலையில், சந்தையில் சப்ளை என்பது மிக குறைவாகவே உள்ளது.
ஈரான் வரி அதிகரிப்பு
தக்காளி, வெங்காயம் மட்டும் அல்ல, கேப்சிகம் உள்ளிட்ட பல காய்கறிகளின் வரத்தும் சரிவில் உள்ளது.
இதற்கிடையில் ஈரான் அரசு ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு வரியினை அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து இறக்குமதி செய்ய முடியாத சூழலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிந்துவில் ஏற்பட்ட பலத்த வெள்ளம் காரணமாக பெரும்பாலான பழத்தோட்டங்கள் அழிந்துவிட்டதாகவும், இதன் காரணமாக வரும் நாட்களில் பேரிட்சை மற்றும் வாழைப்பழங்கள் விலையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் சப்ளை நிறுத்தம்
பலுசிஸ்தான் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அங்கிருந்து ஆப்பிள் சப்ளையும் நிறுத்தப்பட்டுள்ளது.
மொத்தத்தில் பாகிஸ்தான் அரசுக்கு இது மேற்கொண்டு சிக்கலை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காலகட்டத்தில் இந்தியாவின் உதவி பாகிஸ்தானுக்கு கிடைக்குமா? இது உதவிகரமாக மட்டும் அல்லாது, ஏற்றுமதி வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
Pakistan may import tomato and onion from india amid surge prices
Pakistan may import tomato and onion from india amid surge prices/விலைவாசி.. கடன்.. வெள்ளம்.. பாகிஸ்தானை ஆட்டிபடைக்கும் சவால்கள்.. இந்தியா உதவுகிறதா?