மோசடி பணத்தில் கலைப்பொருட்கள் வாங்கும் தொழிலதிபர்கள்

புதுடெல்லி: வங்கிகளில் பல ஆயிரம் கோடிகடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்யும்தொழில் அதிபர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு என்னவெல்லாம் செய்வார்கள்? நிலம் வாங்குவார்கள், வெளிநாட்டில் முதலீடு செய்வார்கள், சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள்… இல்லை, இவை மட்டுமில்லை. அவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு கலைப்பொருள்களையும் வாங்கிக் குவிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது சமீபத்திய சிபிஐ சோதனைகள்.

கடந்த ஜூலை மாதத்தில் சிபிஐ திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் பண மோசடி வழக்குத் தொடர்பாக, மும்பையில் சில இடங்களில் சோதனை மேற்கொண்டது. அப்போது ரூ.40 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஓவியங்கள் கிடைத்துள்ளன.

டிஹெச்எஃப்எல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் திவான் ஹவுசிங் பைனான்ஸ் வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஆகும். அதாவது வங்கிகளிடமிருந்து கடன் பெற்று, அதை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கடனாக வழங்கும். டிஹெச்எஃப்எல் ரூ.31,000 கோடிக்கு மேல் முறைகேடாக கடன் வழங்கியுள்ளதாக 2019-ம் ஆண்டு ‘கோஃப்ரா போஸ்ட்’ வெளிட்ட செய்திபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி வெளியானதை அடுத்து டிஹெச்எஃப்எல் நிறுவனம் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. அந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.

டிஹெச்எஃப்எல் நிறுவனம் டிஹெச்எஃப்எல் நிறுவனத்தின் இயக்குநர்களான கபில் வாத்வான் மற்றும் தீரஜ் வாத்வான் இருவரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதாக கூறி பல்வேறு வங்கிகளிடமிருந்து ரூ.34ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் இந்தத்தொகையை முறையாக பயன்படுத்தவில்லை. பல போலி நிறுவனங்களுக்கு கடனாக அளித்துள்ளனர். இந்த வழக்குத் தொடர்பான விசாரணை இன்னும் நீடித்துவருகிறது.

கடந்த ஜூலை மாதத்தில், மும்பையில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. அப்போது சில ஓவியங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.40 கோடிக்குமேல் என்று தெரியவந்தது. வங்கியில் மோசடி பணத்தைக் கொண்டுதான் இந்த ஓவியங்களைகபில் வாத்வானும் தீரஜ் வாத்வானும் வாங்கியுள்ளனர்.

பண மோசடியில் ஈடுபடும் தொழில் அதிபர்கள், அந்தப் பணத்தைக் கொண்டு நிலம்,முதலீடு மற்றும் செய்வதில்லை, கலைப்பொருட்கள் வாங்குவதையும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

நீரவ், மெகுல் சோக்சி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பியோடிய நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோரிடமிருந்து பலகோடி விலைமதிப்புள்ள கலைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது. நீரவ் மோடியிடமிருந்து மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் மதிப்பிலான 173 கலைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.