சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: பிரபல சாமியார் மீது போலீசார் வழக்கு! மடத்தில் நடந்தது என்ன?

கர்நாடகாவில் உள்ள ஜகத்குரு முருகராஜேந்திர வித்யாபீட மடம், முக்கிய செல்வாக்கு மிக்க லிங்காய மடம். பல அரசியல் தலைவர்களும் இந்த மடத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில், வித்யாபீடத்தில் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மடாதிபதி சிவ மூர்த்தி முருக சரணரு மற்றும் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Stop Abuse

விடுதியில் வசித்த இரண்டு மாணவிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த சி. சந்திரகுமார் என்பவர் இந்தப் புகாரைத் தொடுத்துள்ளார்.

அதாவது, பீடத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகள் மைசூரு சென்று, கடத்தப்பட்டவர்களை மீட்டு, Odanadi Seva Samsthe என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை அணுகி உள்ளனர். தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதைத் தெரிவித்துள்ளனர். அதன் பின்பே இந்தத் தொண்டு நிறுவனம் குழந்தைகள் நலக்குழுவை அணுகி உள்ளது.

Police

காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 376 (2), 376 (3) மற்றும் 149 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம் 17, 5 (எல்) மற்றும் 6 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

காவல்துறை எஃப்.ஐ.ஆரின் படி இந்தச் சிறுமிகள் 2019 முதல் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.