“இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் முன்னோக்கிய வழி” எனும் தலைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி இடம்பெறும் என பிரதி சபாநாயகர் அறிவிப்பு
“இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் முன்னோக்கிய வழி” எனும் தலைப்பில் 2022 ஆகஸ்ட் 30 ஆம் திகதி பி.ப. 2.00 மணி முதல் பி.ப. 4.00 மணி வரை பாராளுமன்றக் கட்டத்தொகுதியில் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் தவிர்க்கமுடியாத காரணங்களால் அன்றைய தினம் இடம்பெறாது எனவும் அந்த நிகழ்வு 2022 ஆகஸ்ட் 31 ஆம் திகதி புதன்கிழமை பி.ப. 2.30 மணி முதல் பி.ப. 4.30 மணி வரை பாராளுமன்ற குழு அறை இலக்கம் 01 இல் நடைபெறும் எனவும் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ இன்று (29) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
நிதி விடயங்கள் தொடர்பான எதிர்கால பாராளுமன்ற விவாதங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வினைத்திறனாக பங்குபற்றுவதற்கு பயனுள்ள வகையில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் முன்னோக்கிய வழி பற்றிய உரையாடலுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்தக் கலந்துரையாடலை இலங்கை மத்தியவங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நடாத்தவுள்ளார்.