சென்னை: தமிழ்நாட்டில் 45 இடங்களில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1162 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் கேந்திரிய பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது. மத்தியப் பிரதேசத்தில் 1066 ஆசிரியர்கள் பணியிடங்களும் கர்நாடகத்தில் 1006 பணியிடங்களும் நிரப்படாமல் உள்ளன.