பறந்துர் விமான முனையம் என்ற திட்டத்தை, அப்பகுதி மக்களின் விருப்பத்திற்க்கு மாறாக – தமிழக அரசு செயல்படுத்த கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட பொருளாளர் இக்பாலின் இல்ல திருமண விழாவில் எஸ்.டி.பிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டார்.
அங்கு செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்
இரு தினங்களுக்கு முன் சென்னை புறநகர் – அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பறந்துர் விமான முனையம் என்ற திட்டத்தை, அப்பகுதி மக்களின் விருப்பத்திற்க்கு மாறாக தமிழக அரசு செயல்படுத்த கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
12 கிராம மக்கள் தமிழக அரசியல் கட்சிகள் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தின் பின்னர் – எவ்வளவு பணம் தந்தாலும் அந்த இடங்களை தர மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்என கூறிய அவர் கடந்த ஆட்சியை போல மக்களை நிர்பந்தபடுத்தி, ஒன்றிய அரசின் திட்டங்களையும், மாநில அரசின் திட்டங்களையும், விவசாயிகள் மீது தினிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்வதாக கூறினார்.
இது சம்பந்தமாக அந்த மக்களை சந்தித்த சேலம் சென்னை எட்டு வழி சாலை – போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் – டாக்டர் குணசேகரன், தர்மராஜா ஆகியோரை, சிவகாஞ்சி காவல்நிலையத்தில் கைது செய்து வைத்துள்ளனர்.
என்றும் மக்களின் குரலை, அரசின் செவிகளுக்கு எடுத்து கூறும், மக்களமைப்பு குரலை முடக்கும் செயலை வன்மையாக கண்டிப்பதுடன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுகொண்டார்.
மேலும் தமிழக அரசு வாக்குறுதியில் கூறிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் விடுதலை இன்னும் நிறைவேறவில்லை எனவும் சிறுபான்மை இன மக்களுக்கு 5%”இட ஒதுக்கீடும் இன்னும் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தமிழகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் அவசியமாக உள்ளதாகவும் கூறிய அவர் அந்த கோரிக்கைகளை எல்லாம் கவனித்தில் கொண்டு வீரியமாக செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மேலும் ஒன்றிய அரசு மக்களுக்கான அரசா அல்லது அதானிக்கான அரசா என தெரியவில்லை எனவும் ஒன்றிய அரசு மக்களுக்கு விரோதமாக கார்ப்பரேட்டுகளுக்காக செயல்படுவதாக தெரிவித்தார்.
மேலும் ஒன்றிய அரசிடம் கூறுவது செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் என விமர்சித்தார். மேலும் சேலம் சென்னை எட்டு வழி சாலையை பொருத்தவரை முதல்வர் பிரதமரை சந்தித்த பொழுது அது வரக்கூடாது என தெரிவித்தார்.
அதனை பார்க்கும் பொழுது மக்களின் நலனில் முதல்வர் கவனம் செலுத்தி வருவதாகவும் ஆனால், அமைச்சர்களும் அதிகாரிகளும் அவர்களது கட்டுப்பாடுகளை இழந்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்தார்.மேலும் ஒன்றிய அரசை ஜி.எஸ் டி அரசு எனவும் விமர்சித்தார்.