வாழ்ந்தா இப்படி வாழணும்.. கனடா நாட்டுல ஒன்னு இல்ல ரெண்டு தெருவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பெயர்!

சென்னை: கனடா நாட்டின் மர்காம் நகரில் உள்ள தெருக்களுக்கு தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Recommended Video

AR Rahman | சர்வதேச எல்லைகளைக் கடந்த AR Rahman-னின் 30 ஆண்டுகள் *Kollywood

நம்ம ஊரில் எம்ஜிஆர் தெரு, காந்தி நகர், அம்பேத்கர் தெரு என ஏகப்பட்ட தலைவர்களின் பெயர்கள் பல ஊர்களில் வைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் கனடா நாட்டில் உள்ள ஒரு நகரத்தின் தெருக்களுக்கு பெயராக வைக்கப்பட்டு இருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இனி ஏ.ஆர். ரஹ்மான் ஆட்சி

இனி ஏ.ஆர். ரஹ்மான் ஆட்சி

இந்த ஆண்டு முதல் 6 மாதங்கள் அனிருத்தின் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கோப்ரா படத்துக்கு பிறகு ஏ.ஆர். ரஹ்மான் இசை ஆட்சி தான் என ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் என வரிசையாக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பெரிய படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. முன்னதாக இரவின் நிழல் திரைப்படத்திலும் ஏ.ஆர். ரஹ்மானின் இசை ரசிகர்களை கவர்ந்திழுத்தது குறிப்பிடத்தக்கது.

கனடா நாட்டு தெருவுக்கு பெயர்

கனடா நாட்டு தெருவுக்கு பெயர்

அரசியல் தலைவர்கள் வாழும் போதோ அல்லது மறைந்த பிறகோ அவர்கள் பெயரில் நகர்களும் தெருக்களும் நம்ம ஊரில் அதிகம் இருப்பதை பார்க்கிறோம். இந்நிலையில், கனடா நாட்டில் உள்ள Markham எனும் நகரத்தில் உள்ள தெருவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் தெரு என பெயர் சூட்டி உள்ளனர். அதன் அருகே இசைப்புயல் செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

ஏற்கனவே ஒன்று

ஏற்கனவே ஒன்று

கனடா நாட்டின் மர்காம் நகரின் தெருவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பெயர் சூட்டுவது இது முதல் முறை அல்ல என்றும், ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு அல்லா ரக்கா ரஹ்மான் என ஏ.ஆர். ரஹ்மான் பெயரை ஒரு தெருவுக்கு சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இது இரண்டாவது முறையாக ஏ.ஆர். ரஹ்மானுக்கு கனடாவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ரசிகர்கள் பெருமிதம்

ரசிகர்கள் பெருமிதம்

அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் இரு ஆஸ்கர்களை ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக வென்று தமிழர்களுக்கும் இந்திய சினிமா துறைக்கும் பெருமை சேர்த்த ஏ.ஆர். ரஹ்மான் பெயரில் கனடா நாட்டில் இரு தெருக்கள் உள்ளதை அறிந்த ரசிகர்கள் பெருமிதமாக அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

அடுத்தடுத்து ஆடியோ லாஞ்ச்

அடுத்தடுத்து ஆடியோ லாஞ்ச்

வரும் செப்டம்பர் 2ம் தேதி சிம்புவின் வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற விருக்கிறது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 6ம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரு இசை வெளியீட்டு விழாவிலும் நிகழ்ச்சியின் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.