கனடாவின் மர்காம் நகரில் உள்ள தெருவுக்கு ஏ.ஆர் ரஹ்மான் பெயர்.
எல்லோருக்கும் நன்றி என இசைப்புயல் நெகிழ்ச்சி
கனடாவின் மர்காம் நகரில் உள்ள தெருவுக்கு ஆஸ்கர் தமிழன் ஏ.ஆர் ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதன் அருகே இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூகவலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.
கனடா நாட்டின் மர்காம் நகரின் தெருவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பெயர் சூட்டுவது இது முதல் முறை அல்ல என்றும், ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு அல்லா ரக்கா ரஹ்மான் என ஏ.ஆர். ரஹ்மான் பெயரை ஒரு தெருவுக்கு சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இரண்டாவது முறையாக ஏ.ஆர். ரஹ்மானுக்கு கனடாவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் இரு ஆஸ்கர்களை ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக வென்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்த ஏ.ஆர். ரஹ்மான் பெயரில் கனடாவின் இரு தெருக்கள் உள்ளதை அறிந்த ரசிகர்கள் பெருமிதமாக அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
— A.R.Rahman (@arrahman) August 29, 2022
இது தொடர்பாக ரகுமானின் டுவிட்டர் பதிவில், இதை நான் ஒரு போதும் என் வாழ்நாளில் எதிர்பார்த்ததில்லை, உங்கள் எல்லோருக்கும் மர்கான் நகர மேயருக்கும் நன்றியுனர்வுடன் இருப்பேன்.
இசையமைக்கும் பணியில் இருந்து ஓய்வுபெறாமல் பொறுப்புடன் உழைக்க இது என ஊக்கமாக இருக்கும், அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
Honoured and grateful for this recognition from @cityofmarkham and @frankscarpitti and the people of Canada 🇨🇦 🇮🇳 #arrahmanstreet #markham #canada #infinitelovearr #celebratingdiversity pic.twitter.com/rp9Df42CBi
— A.R.Rahman (@arrahman) August 29, 2022