ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
குறிப்பாக ரிலையன்ஸின் வருடாந்திர கூட்டம் அதன் முதலீட்டாளர்களுக்கு நீண்டகால நோக்கில் பலன் கொடுக்க கூடிய விஷயங்கள் இருக்குமா? என்ற எதிர்பார்ப்புகளும் இருந்து வரும்.
அப்படி என்ன அறிவிப்புகள் வரலாம்? குறிப்பாக ரிலையன்ஸின் ரீடெயில் வணிகத்தில் பல்வேறு கையகப்படுத்தல், விரிவாக்கம் என இருந்து வரும் நிலையில், ஜியோமார்ட் குறித்து முக்கிய அப்டேட்கள் இருக்குமா? என்ற பெருத்த எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.
ரிலையன்ஸ் ரீடைல்: FMCG துறையில் புதிய வர்த்தகம்.. 520 மில்லியன் வாடிக்கையாளர்கள்..!
ஆசியாவில் டாப் விற்பனையாளர்
ரிலையன்ஸ் ரீடெயில் குழுமத்தின் ஒட்டுமொத்த டர்ன் ஓவர் வரலாறு காணாத அளவுக்கு 1 லட்சம் கோடி ரூபாயினை தாண்டியுள்ளது. இதன் எபிடா விகிதம் 12,000 கோடி ரூபாயினையும் எட்டியுள்ளது. இதற்காக ரீடெயில் குழுமத்திற்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ரிலையன்ஸ் ரீடெயில் இன்று ஆசியாவிலேயே டாப் 10 சில்லறை விற்பனையாளர்களில் ஒருவராக மாறியுள்ளது.
வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு
கடந்த ஆண்டில் மட்டும் இஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடெயில், 200 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையினை வழங்கியுள்ளது. இது இங்கிலாந்து பிரான்ஸ், மற்றும் இத்தாலியின் மக்கள் தொகைக்கு சமமான ஒன்றாகும். நாங்கள் பிசிகல் கடைகள் மற்றும் டிஜிட்டல் ஸ்டோர்களை கொண்டுள்ளோம். கடந்த ஆண்டில் எங்கள் கடைகளில் 520 மில்லியன் வாக் இன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளோம்.
கடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இதே டிஜிட்டல் தளங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 18% அதிகரித்து, 4.5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
நங்கள் எங்களின் கடைகளின் எண்ணிக்கையை 15,000–க்கு மேல் கொண்டு செல்ல, கடந்த ஆண்டில் நாங்கள் 2500-க்கும் மேற்பட்ட கடைகளை தொடங்கியுள்ளோம். தற்போது 42 மில்லியன் சதுர அடி பரப்பளவில் பரவியுள்ளது.
இது தான் இலக்கு
இதன் மூலம் இந்த ஆண்டில் 1,50,000-க்கு அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 3,60,000-க்கும் அதிகமாகக் கொண்டு சென்றோம் என்று இஷா அம்பானி கூறியுள்ளார்.
மேலும் இந்த ஆண்டு எங்கள் வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களின் வணிகத்தை, நாங்கள் தொடங்குவோம் என்பதை அறிவிப்பதில் மகிச்சியடைகிறோம். ஒவ்வொரு இந்தியரின் அன்றாட தேவைகளை தீர்க்கும் உயர்தர மலிவு விலையில் பொருட்களை உருவாக்கி வழங்குவதே, எங்களின் நோக்கம் என்றும் இஷா அம்பானி கூறியுள்ளார்.
வளர்ச்சி விகிதம் அதிகரிக்கலாம்
தொடர்ந்து ரீடெயில் வணிகத்தினை விரிவுபடுத்தும் விதமாக ரிலையன்ஸ், கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு நிறுவனங்களை கையகப்படுத்தியது. பல நிறுவனங்களுடன் கூட்டணியும் வைத்து வருகின்றது. இதுவும் ரிலையன்ஸ் ரீடெயில் வணிகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனலாம்.
reliance agm 2022 : Reliance Retail on achieve a record of Rs.2 lakh crore turnover
reliance agm 2022 : Reliance Retail on achieve a record of Rs.2 lakh crore turnover/reliance agm 2022: சாதனை படைத்து வரும் ரிலையன்ஸ் ரீடெயில்.. வருடாந்திர கூட்டத்தில் முக்கிய அப்டேட்!