கான்பூர்: கான்பூர் பள்ளி மாணவிகள் ஒருவரையொருவர் அடித்து முடியை இழுத்து சண்டைபோடும் வீடியோ ஒன்று வெளியாகி, அதிர்ச்சியை கூட்டி வருகிறது.
சமீபகாலமாகவே பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது.. இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கைதாகியும் வருகிறார்கள்.
அதேசமயம், சில பள்ளிகளில் மாணவிகளே அத்துமீறும் தரக்குறைவான செயல்பாடுகளில் ஈடுபடும் செயல்களும் நடக்கின்றன.. அதிலும் சில அரசு பள்ளி மாணவர்களின், அட்டூழியங்களும், அமர்க்களங்களும் எல்லைமீறி வருகின்றன.. அந்த வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
முக சுளிப்பு
அதிலும், மாணவிகள் பீர் குடிப்பது, புகைப்பிடிப்பது, பஸ்களில் மது பாட்டிலை அருந்துவது, வகுப்பறையில் மாணவர்கள் மீது படுத்து கிடப்பது என ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி முகம் சுளிக்கும் இந்த வீடியோக்களை பார்த்து, பொதுமக்களும், பெற்றோர்களும் கவலை கொண்டுள்ளனர்.. அந்தவகையில், இணையத்தில் தற்பாது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.. கான்பூர் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அங்கு படிக்கும் மூன்று மாணவிகள் ஒருவருக்கொருவர் தாக்கி கொள்கிறார்கள்..
கிளாஸ் ரூமில்
கிளாஸ் ரூமிலேயே, யூனிபார்மில் 3 மாணவிகள் சண்டையிடும் போது ஒருவரது முடியை ஒருவர் இழுத்து ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்கின்றனர். அவர்கள் தலைமுடியை ஒருவருக்கொருவர் பிடித்து இழுத்து ஆவேசமாக சண்டையும் போடுகிறார்கள்.. ஆரம்பத்தில் இந்த வீடியோவை பார்த்ததும், மாணவிகள் விளையாட்டுக்காக இப்படி செய்வதாக தோன்றியது.
பெஞ்ச் + டேபிள்
ஆனால், நிஜமாகவே அவர்கள் தாக்கி கொண்ட காட்சி பெற்றோரிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.. கிளாஸ் நேரத்திலேயே இந்த சண்டை நடந்துள்ளது.. 3 பேரும் தகராறு செய்து கொள்வதை பார்த்த பிற மாணவிகள், இதை தடுக்க முனைந்துள்ளனர்.. ஆனால், அந்த மாணவிகளால் இவர்களை விலக்க முடியவில்லை… சண்டையை நிறுத்துங்கள் என்று கதறுகிறார்கள்.. அப்போதும் 3 பேரும் நிறுத்தவில்லை.. 3 பேரும் ஒருவரையொருவர் தலைமுடிகளை பிடித்து கொண்டு, கடைசிவரை விடவில்லை.. நடுநடுவே அங்கிருந்த டேபிள் சேர்களில் 3 பேரின் மண்டைகளும் இடித்து கொண்டன.
லாஸ்ட் வரை தெரியல
இந்த வீடியோவை பத்திரிகையாளர் அமித் சிங் பதிவிட்டுள்ளார்.. இதை ஷேர் செய்த உடனேயே, 85.9 ஆயிரம் பார்வைகள் இதை லைக் செய்துள்ளனர்.. 300 க்கும் மேற்பட்ட ரீட்வீட்கள் செய்துள்ளனர்.. மாணவ, மாணவிகளில் சிலரின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் குறைந்து வருகிறது என்பதை காட்டும்விதமாகவே, இந்த வீடியோ அமைந்துள்ளது என்றும், புகழ்பெற்ற பள்ளியில் படிக்கும் மாணவிகளே இதுபோன்று நடந்து கொள்ளலாமா? என்றும் பொதுமக்கள் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.. இதில் ஹைலைட் என்னவென்றால், வெறித்தனமாக இந்த 3 பேரும் எதற்காக சண்டை போட்டுக் கொண்டார்கள் என்பது மட்டும் இதுவரை தெரியவில்லையாம்.