சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y35 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து சற்று விரிவாக பார்ப்போம்.
சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது Y35 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது விவோ.
இந்த போனின் விலை ரூ.18,499 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விலையில் அறிமுகம் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.சிறப்பு அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்.
- 6.58 இன்ச் திரை அளவு. ஃபுள் ஹெச்.டி எல்.சி.டி டிஸ்பிளே.
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 SoC சிப்செட்.
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்.
- பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா.
- 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இடம் பெற்றுள்ளது.
- டைப் ‘சி’ சார்ஜிங் போர்ட்.
- 5000mAh பேட்டரி.
- 44 வாட்ஸ் ஃபிளாஷ் சார்ஜ் வசதி.
- டியூயல் 4ஜி இணைப்பில் இந்த போன் இயங்குகிறது.
Sara Ali Khan’s style can turn heads. Now, even more so with the new #vivoY35 that’s doubly stylish!
Buy Now: https://t.co/Y5brVfD8xf#ItsMyStyle #vivo #NewLaunch pic.twitter.com/Qn3223o4bg
— Vivo India (@Vivo_India) August 29, 2022