கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; போலீஸ் விசாரணை தீவிரம்

Police enquire Kovai lawyer on Kodanadu case: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கோடநாடு சம்பவம் கடந்த 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஏராளமான ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி சுதாகர் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: காட்டுக்குள் மாயமான நலிவுற்ற யானை 12 நாள்களுக்கு பின் சிக்கியது.. மீட்புப் பணி தீவிரம்

இந்த விசாரணை சென்னை, கோவை, உதகை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை பொறுத்தவரை இதுவரை 220 பேரிடம் நடைபெற்றுள்ளது.

இந்த விசாரணையில் மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் அவரது உதவியாளர் பழனிச்சாமி, அதே போல பாண்டிச்சேரி பகுதி ஓசியன் ரிசார்ட் நிர்வாக இயக்குனர் நவீன் பாலாஜி, மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறு குட்டி, மதுரையைச் சேர்ந்த தொழில் அதிபர் லாஜி ஹொரா, மன்னார்குடி சேரன் குளத்தைச் சேர்ந்த குணசேகரன், மேலும் நமது அம்மா நாளிதழில் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜு ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வழக்கறிஞர் செந்தில் இடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.