ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 45 வது வருடாந்திர கூட்டத்தில் பெரும் அறிவிப்புகளை எதிர்பார்க்க காத்திருந்த முதலீட்டாளர்களுக்கு 3 முக்கியமான விஷயங்கள் கிடைத்துள்ளது. ஆனால் இதில் நியூ எனர்ஜி பிரிவில் அறிவித்திருக்கும் திட்டம் பலன் கொடுக்க நீண்ட காலமாகும்.
ரிலைஸயன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி நியூ எனர்ஜி துறையில் ஏற்கனவே பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்து 4 ஜிகா பேக்ட்ரியை கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில் ஐந்தாவதாக ஒரு தொழிற்சாலை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் ஆண்டு பொதுக் கூட்டத்தின் பிரம்மாண்ட அறிவிப்புகளின் போதும் பங்குகள் சரிவு.. என்ன காரணம்?
பவர் எலக்ட்ரானிக்ஸ்
ரிலையன்ஸ் குழுமம் பவர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் புதிய ஜிகா தொழிற்சாலை அமைக்க உள்ளதாக அறிவித்தார் முகேஷ் அம்பானி.
கிரீன் எனர்ஜி பிரிவின் முழு வர்த்தக மதிப்புச் சங்கிலியையும் இணைக்கும் பாலமாகப் பவர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு இருக்கும் என நம்புவதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
பவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மென்பொருள் அமைப்பு
தொலைத்தொடர்பு, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் ஐஓடி இயங்குதளத்தை மேம்படுத்தும் வகையில் பவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மென்பொருள் அமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தளத்தைக் கட்டமைக்க உள்ளோம் என இன்றைய கூட்டத்தில் தெரிவித்தார்.
கூட்டணி
முன்னணி உலகளாவிய முன்னணி நிறுவனங்கள் உடன் கூட்டு முயற்சியின் மூலம் மிகவும் மலிவு விலையில் தீர்வுகளை வழங்குவதற்கும், செயல்திறன், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் உலகளாவிய தரநிலைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பவர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் புதிய தொழிற்சாலையை உருவாக்க உள்ளோம் என்று முகேஷ் அம்பானி பேசினார்.
திருபாய் அம்பானி கிரின் எனர்ஜி ஜிகா காம்பிளக்ஸ்
கடந்த ஆண்டு, ஜாம்நகரில் திருபாய் அம்பானி கிரின் எனர்ஜி ஜிகா காம்பிளக்ஸ் அமைப்பதாக ரிலையன்ஸ் அறிவித்தது. இந்தக் கட்டமைப்பு வாயிலாக 2030 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 100GW சோலர் எனர்ஜியை உற்பத்தி செய்யும் தளத்தை நிறுவி செயல்படுத்துவது தான் முக்கியமான இலக்காக உள்ளது.
ஜிகா பேக்டரி
4 ஜிகா பேக்டரி என்பதில் முதலில் போட்டோபோல்டாயிங் பேனல், 2வது எனர்ஜி ஸ்டோரேஜ், 3வது கிரீன் எனர்ஜி, 4வது பியூயல் செல் சிஸ்டம்ஸ். இந்த 4 தொழிற்சாலைகள் உடன் தற்போது 5வதாகப் பவர் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை உருவாக்கப்பட உள்ளது. இந்த 4 ஜிகே பேக்டரியை அமைக்க 60000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை அறிவிக்கப்பட்டு உள்ளது.
Reliance AGM: new giga factory for power electronics apart from 4 GIGA factories
Reliance AGM: new giga factory for power electronics apart from 4 GIGA factories புதிய தொழிற்சாலை அமைக்கும் ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி மாஸ் திட்டம்..!