ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையில் ஒழுங்குமுறை விதிகளைக் கடைப்பிடிக்காத காரணத்தால் எட்டுக் கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த ரிசர்வ் வங்கி ஒவ்வொரு வங்கிக்கும் தனித்தனியாக அபராதம் குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதில் முக்கியமான விசாகப்பட்டினம் கூட்டுறவு வங்கிக்கு ஆர்பிஐ சுமார் 55 லட்சம் ரூபாய் தொகையை அபராதங்கள் விதித்துள்ளது.
இந்த 8 கூட்டுறவு வங்கிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வங்கியும் அடக்கம்.
இலங்கை சந்தையை பிடிக்க 10 நாடுகள் போட்டி.. அடேங்கப்பா..!
ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி எட்டுக் கூட்டுறவு வங்கிகள் ஒழுங்குமுறை விதிகளைக் கடைப்பிடிக்காத காரணத்தால் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பட்டியலில் அதிகம் அபராதம் பெற்ற வங்கி விசாகப்பட்டினம் கூட்டுறவு வங்கி, ஆர்பிஐ இந்தக் கூட்டுறவு வங்கிக்கு சுமார் 55 லட்சம் ரூபாய் தொகையை அபராதமாக விதித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா
இதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்துக் கைலாசபுரம் சேர்ந்த பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் ஊழியர் கூட்டுறவு வங்கிக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலம் பகுதியை சேர்ந்த The Ottapalam Co-operative Urban Bank Ltd ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தி தாருஸ்ஸலாம் கூட்டுறவு அர்பன் வங்கிக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
விசாகப்பட்டினம் கூட்டுறவு வங்கி
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் கூட்டுறவு வங்கி வருமான அங்கீகாரம், சொத்து வகைப்பாடு, ஒதுக்கீடு மற்றும் வீட்டுத் திட்டங்களுக்கான நிதி தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக ரூ.55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் விளக்கம் கொடுத்துள்ளது.
ஆந்திரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நெல்லூர் மாவட்ட காந்தி நகர் தி நெல்லூர் கோஆப்ரேட்டிவ் அர்பன் வங்கி லிமிடெட் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா பகுதியை சேர்ந்த காக்கிநாடா கூட்டுறவு டவுன் வங்கி லிமிடெட் ஆகிய இரு வங்கிக்கு ரிசர்வ் வங்கி தலா ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
உத்தரபிரதேசம்
மேலும், கேந்த்ராபாரா-வில் இருக்கும் கேந்த்ராபாரா நகரக் கூட்டுறவு வங்கிக்கு ரூ.1 லட்சமும், உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் உள்ள தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.5 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதம்
இந்த அபராதங்கள் அனைத்தும் ஒழுங்குமுறை விதிகளைக் கடைப்பிடிக்காத காரணத்தால் மட்டுமே ஆர்பிஐ விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் தொடர்பான பரிவர்த்தனைகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தான் மிகவும் முக்கியமான விஷயமாக உள்ளது. இதனால் மக்களின் பணத்திற்கும் இந்த அபராதத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை.
RBI imposes penalty on 8 cooperative banks including Tamilnadu Co-operative Bank
RBI imposes a penalty on 8 cooperative banks including Tamilnadu Co-operative Bank திருச்சி வங்கி உட்பட 8 வங்கிகள் மீதி RBI அபராதம் விதித்துள்ளது..!