விதிமுறை மீறி சிக்னலை கடந்து சென்ற வாகனத்திற்கு அபராதம் விதித்த போலீஸ்காரருக்கு சாபம் விட்ட வாகன ஓட்டியின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
சென்னை போரூர் சிக்னலில் பணியில் இருந்த போலீசார் அந்த வழியாக விதிமுறை மீறி சிக்னலை கடந்து சென்ற இருசக்கர வாகனத்தை மடக்கி ரூ.1200 அபராதம் வீதித்துள்ளனர். இதனால் வாகன ஓட்டி அந்த போக்குவரத்து போலீசாரிடம் எதற்காக இவ்வளவு அபராதம் விதித்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு போக்குவரத்து விதிகளை மீறியதால் அபராதம் விதித்ததாக கூறியுள்ளனர்.
தான் போக்குவரத்து விதிமுறை மீறி சென்றிருந்தால் சிசிடிவி காட்சிகளை காட்டுமாறு அந்த நபர் கேட்டுள்ளார். அதற்கு அதனை நீதிமன்றத்தில் காட்டுவதாக போக்குவரத்து போலீசார் கூலாக பதில் கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த வாகன ஓட்டி, ’இவ்வளவு அபராதம் விதித்த நீங்கள் நல்லாவே இருக்க மாட்டீர்கள்’ என சாபம் விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார்.
இந்நிலையில் வாகன ஓட்டி சாபமிட்டு செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM