சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் மதுரையில் தங்கியிருக்க வேண்டும். இரு ஆசிரியைகளும் சேலத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை அளித்துள்ளது. தனியார் பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கும் ஜாமின் வழங்கிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டது.