சிறுமி டான்யாவிற்கு உடல்நிலை எப்படி இருக்கிறது? நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் ஶ்ரீவாரி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்டீபன்ராஜ் – சௌபாக்யா தம்பதி. இவர்களுக்கு கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். மூத்த மகள் டான்யாவிற்கு 9 வயது ஆகிறது. இவர் அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் வீராபுரம் அரசினர் பள்ளியில் நான்காம் வகுப்பை தொடர்ந்து படித்து வந்துள்ளார்.

ஆனால் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்காததால் மன வருத்தம் அடைந்தார். இந்நிலையில் டான்யா பற்றிய செய்தி ஊடகங்களில் வெளியானது. இதனையறிந்த தமிழக முதல்வர்

உடனடியாக போதிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள், சிறுமி டான்யாவின் வீட்டிற்கு சென்று அரசின் உதவிகளை வழங்கினார். மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார். கடந்த 17ஆம் தேதி மாலை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முக அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து 5 நாட்கள் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இந்த சூழலில் டான்யாவிற்கு கடந்த 23ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 9 மணி நேரமாக உயர் தொழில் நுட்ப முக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் 31 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் ஈடுபட்டனர்.

இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. பின்னர் ISOLATED ICUல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து 5 நாட்களாக கண்காணித்து வந்தனர். சிறுமி டான்யாவின் உடல்நிலை தேறி வருவதால் பொது பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டார். தற்போது வாய் வழியாக திரவ உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அறிவிக்கை வெளியிட்டது.

திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக திருமண மண்டபம் கட்ட பூமி பூஜை!

இந்நிலையில் சிறுமியை காண முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வருகை புரிந்தார். அறுவை சிகிச்சை முடிந்து தற்போது உடல்நிலை எப்படி இருக்கிறது என்று நலம் விசாரித்தார். அப்போது அவருடன் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.