ஆப்கானிஸ்தானில் சில குறிப்பிட்ட பகுதிகளில் டிரோன்கள் பறப்பது அதிகரித்துள்ளதால் அல்கொய்தா அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை தாக்க அமெரிக்கா குறி வைத்திருக்கிறதா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதா என்பது குறித்து அமெரிக்கா எந்த அதிகாரப்பூர்வமான விளக்கத்தையும் தரவில்லை. அதிகாலை 5 மணிக்கு ஒரு டிரோன் இலக்கு வைத்து ஹெல்மண்ட் பகுதியில் சுற்றி வந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
இங்குள்ள முகாம்களில் சில முக்கியமான அல்கொய்தா தலைவர்கள் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது காபூலில் கடந்த ஆகஸ்ட் முதல் தேதியில் டிரோன் தாக்குதல் மூலமாக அல்கொய்தா தலைவர் ஜவ்வாரி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.