விழுப்புரத்தில் அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்துள்ளார்.
விழுப்புரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (35). இவர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று மாலை விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.
அப்பொழுது பேருந்து நிலையத்திற்குள் வந்த அரசு டவுன் பேருந்து எதிர்பாராதவிதமாக முருகன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.