கடந்த சில தினங்களாகவே எஸ்பிஐ பெயரில் பலருக்கும் மெசேஜ்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த செய்தியில் வங்கியில் உங்களது யோனோ கணக்கு செயலிழந்துள்ளது. ஆகையால் உங்களது பான் எண்ணினை அப்டேட் செய்யுங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மெசேஜினை எஸ்பிஐ அனுப்பவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து விளக்கத்தினையும் அளித்துள்ளது.
எஸ்பிஐ பெயரில் போலி செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அது உண்மை அல்ல. வாடிக்கையாளர்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம்.
விலைவாசி.. கடன்.. வெள்ளம்.. பாகிஸ்தானை ஆட்டிபடைக்கும் சவால்கள்.. இந்தியா உதவுகிறதா?
யாருக்கும் பகிராதீர்கள்
இதுபோன்ற தவறான தகவல்களை நம்பி, வாடிக்கையாளர்ள் யாருக்கும் மெயிலில் பான் கார்டு உள்ளிட்ட எந்த ஆவணத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளது.
இது குறித்து PIB fact check அமைப்பும் ஆராய்ந்து. இது #Fake மெசேஜ். ஆக யாரும் இது போன்று வரும் எஸ்எம்எஸ் அல்லது மெயிலுக்கு யாரும் பதிலளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
புகார் கொடுங்க
அப்படி உங்களுக்கு இதுபோன்ற எஸ் எம் எஸ் அல்லது மெயில் வந்தால் [email protected] என்ற மெயில் ஐடிக்கு புகார் அளிக்கலாம். அப்படி இல்லை எனில் 1930 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ யோனோ
எஸ்பிஐ-யின் பிரபலமான செயலியான யோனோ, you only need one என்பதன் சுருக்கமாகும். இது கடந்த 2017ல் எஸ்பிஐயால் தொடங்கப்பட்டது. இது ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாகும். இதன் மூலம் வங்கி சேவை உள்பட பிற சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
எச்சரிக்கையா இருங்க?
எஸ்பிஐ ஓருபோதும் வாடிக்கையாளார்களிடம் மெசேஜ் மூலம், இதுபோன்ற தனிப்பட்ட விவரங்களை கேட்பதில்லை. ஆக இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எஸ்பிஐ மட்டும் எந்த வங்கியும், நிதி நிறுவனமும் இதுபோன்று விவரங்களை ஒருபோதும் கேட்பதில்லை. ஆக இப்படி வந்தால் ஒரு முறைக்கு பல முறை யோசித்து, சந்தேகம் இருப்பின் நேரடியாக வங்கிக் கிளையை நேரடியாக அணுகி தெரியப்படுத்துங்கள். புகார் அளியுங்கள். இதன் மூலமே நீங்கள் மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும்.
மோசடி மூலம் இழப்பு
கடந்த 2021 – 22ம் நிதியாண்டில் மட்டும் வாடிக்கையாளர்கள் மோசடி மூலம் 179 கோடி ரூபாய் நிதியினை இழந்துள்ளனர். இதே 2020 – 21ம் நிதியாண்டில் ஏடிஎம், டெபிட் கார்டு, இணைய வங்கி போன்ற பல மோசடிகள் மூலம் 216 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதை ஆர்பிஐ தரவு சுட்டிக் காட்டுகின்றது.
யோனோ 2.0
இதற்கிடையில் எஸ்பிஐ-யின் தலைவர் தினேஷ் குமார் காரா, யோனோ ஆப் பற்பல புதிய அம்சங்களுடன், யோனோ 2.0 அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதில் பல மேம்படுத்தப்பட்ட வசதிகள் இருக்கும் என கூறியுள்ளார்.
எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் பயணம் தொடர்ந்து கொண்டே உள்ளது. தற்போது வங்கியில் 96.6% அதிகமான பரிவர்த்தனைகள் மாற்று வழிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
யோனோ மூலம் சேமிப்பு கணக்கு
இதற்கிடையில் யோனோ பயனர்களின் எண்ணிக்கை 5.35 கோடியை தாண்டியுள்ளனர். இது ஒரு பெரிய மைல்கள். இது வங்கிக்கு குறிப்பிடத்தக்க மதிப்பினை உருவாக்கியுள்ளது.
புதிய சேமிப்பு கணக்குகளில் 65% யோனோ மூலம் தொடங்கப்படுவதாக சமீபத்திய தரவு ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது.
Fact check: SBI’s message asking customers to update Pan number details is Fake:be alert
Fact check: SBI’s message asking customers to update Pan number details is Fake:be alert/இப்படி ஒரு மெசேஜ் உங்களுக்கு SBI பெயரில் வந்திருக்கா.. நம்பாதீங்க.. உஷாரா இருங்க!