புதுச்சேரியின் கடன் நிலுவைத்தொகை ரூ.10,000 கோடி. CAG அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுச்சேரியில் பாஜக கூட்டணியின் சார்பில் முதல்வர் ரங்கசாமி ஆட்சி நடத்தி வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமி சமீபத்தில் சட்டமன்றத்தில் புதுச்சேரி மாநில பட்ஜெட்டை சமர்ப்பித்தார் என்பதும் அதில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் CAG அறிக்கைப்படி புதுச்சேரியின் கடன் நிலுவை தொகை 10 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாநிலத்தில் வாழ்ந்தால் மின்கட்டணமே கட்ட வேண்டாம்.. பொதுமக்கள் மகிழ்ச்சி!

புதுச்சேரியின் நிலுவைக்கடன்

புதுச்சேரியின் நிலுவைக்கடன்

யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் நிலுவையில் உள்ள கடன் 2020-21ல் ரூ. 10,000 கோடியைத் தாண்டியுள்ளது என்று CAG என்று கூறப்படும் இந்தியக் கட்டுப்பாட்டாளர் மற்றும் தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை தெரிவித்துள்ளது. மார்ச் 2021ஆம் ஆண்டில் முடிவடைந்த புதுச்சேரி யூனியன் பிரதேச நிதி குறித்த அறிக்கையை CAG வெளியிட்டுள்ள நிலையில் அதில் தான் இந்த அதிர்ச்சி தகவல் உள்ளது.

ரூ.10,894 கோடி கடன்

ரூ.10,894 கோடி கடன்

கடந்த 2016-17ஆம் ஆண்டில் ரூ.8,299 கோடியாக இருந்த கடன் 2020-21ஆம் ஆண்டில் ரூ.10,894 கோடியாக அதிகரித்துள்ளதாக முதல்வர் என் ரங்கசாமி திங்கள்கிழமை சபையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே காலகட்டத்தில் புதுச்சேரியின் வளர்ச்சி விகிதம் 7.03% லிருந்து 15.29% ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வருவாய் பற்றாக்குறை
 

வருவாய் பற்றாக்குறை

2020ஆம் ஆண்டில் புதுச்சேரியின் வருவாய் வரவுகள் ரூ.5,890 கோடி ஆகும். இது முந்தைய ஆண்டை விட ரூ.891 கோடி குறைவு. இதன் காரணமாக 2019-20ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.55 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.1,370 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிப்பற்றாக்குறை

நிதிப்பற்றாக்குறை

2019-20ஆம் ஆண்டில் ரூ.381 கோடியாக இருந்த நிதிப்பற்றாக்குறை 2020-21ஆம் ஆண்டில் ரூ.1,615 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீட்டு பற்றாக்குறைக்கு பதிலாக ரூ.742 கோடியை மீண்டும் கடனாக வழங்கியது.

ரூ.212.95 கோடி முடக்கம்

ரூ.212.95 கோடி முடக்கம்

பொதுப்பணித்துறை மற்றும் மின்சாரத்துறையால் முழுமை பெறாத 58 திட்டங்களில் ரூ.212.95 கோடி முடக்கப்பட்டுள்ளது என CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 462.25 கோடி மதிப்பிலான 788 திட்டங்களின் பயன்பாட்டுச் சான்றிதழ்களை அரசு சமர்ப்பிக்கவில்லை என்றும், 9 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.39.88 கோடி மதிப்பிலான 226 திட்டங்களுக்கு பயன்பாட்டு சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி

மோசடி

கடந்த ஐந்து ஆண்டுகளாக 17 அமைப்புகள் வருடாந்திர கணக்குகளை சமர்ப்பிக்கவில்லை என்றும், பல்வேறு துறைகளில் ரூ.28.05 கோடி அரசுப் பணம் முறைகேடு, நஷ்டம், திருட்டு ஆகியவற்றால் மோசடி செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்காக 2021 மார்ச் வரை 321 வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும் CAG அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரூ.62.43 கோடி இழப்பு

ரூ.62.43 கோடி இழப்பு

கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை புதுச்சேரியில் 13 அரசு நிறுவனங்கள் இருந்தன. இந்த பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த முதலீடு ரூ.738.03 கோடி. இவற்றில் 6 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.35.07 கோடி லாபம் ஈட்டியுள்ளன. ஆனால் 6 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.62.43 கோடி இழப்பை சந்தித்துள்ளதால் ஒட்டுமொத்தமாக ரூ.27.36 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக CAG அறிக்கை கூறுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Puducherry’s outstanding debt crossed Rs 10,000 crore in 2020-21: CAG

Puducherry’s outstanding debt crossed Rs 10,000 crore in 2020-21: CAG | புதுச்சேரியின் கடன் நிலுவைத்தொகை ரூ.10,000 கோடி. CAG அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

Story first published: Tuesday, August 30, 2022, 6:49 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.