சர்வதேச சந்தையில் நிலவிய பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், கடந்த அமர்வில் பலத்த சரிவினைக் கண்டன. குறிப்பாக தொடக்கத்தில் 1000 புள்ளிகளுக்கு மேலாக சரிவினைக் கண்ட நிலையில், முடிவில் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் காணப்பட்டது.
ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவலில் பேச்சுக்கு பிறகு, சர்வதேச சந்தைகள் பலவும் அழுத்ததிலேயே காணப்பட்டது.
இது பணவீக்கத்தினை 2% கொண்டு வரும் வரையில் மத்திய வங்கியானது ஓயாது என கூறியிருந்தது, நிச்சயம் வரவிருக்கும் கூட்டத்திலும் வட்டி அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.1500 கோடி முதலீடு செய்யும் ஓபராய் குரூப்.. எந்த மாநிலத்தில் தெரியுமா?
சென்செக்ஸ் நிலவரம்?
கடந்த அமர்வில் சென்செக்ஸ் 861 புள்ளிகள் குறைந்து, 57,973 புள்ளிகளாகவும், நிஃப்டி 246 புள்ளிகள் குறைந்து, 17,313 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இது டெக்னிக்கலாக இன்னும் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் 16,920 புள்ளிகளாகவும் உள்ளது. ஒரு வேளை ஏற்றம் கண்டாலும் உடனடி ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 17,400 ஆக இருக்கலாம்.
முக்கிய லெவல்கள்
பைவேட் சார்ட்டின் படி, நிஃப்டியின் முக்கிய சப்போர்ட் லெவல் 17,193 புள்ளிகளாகவும், அதனை தொடர்ந்து 17,072 புள்ளிகளாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 17,407 மற்றும் 17,500 புள்ளிகளாகவும் கணித்துள்ளனர்.
பேங்க் நிஃப்டி
க்டந்த அமர்விலேயே 700 புள்ளிக்ளை இழந்த பேங்க் நிஃப்டி, 38,277 ஆக இருந்தது. எனினும் தினசரி கேண்டிலில் சற்று ஏற்றம் காண வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடுத்த சப்போர்ட் லெவல் 38,015 புள்ளிகளாகவும், அதனை தொடர்ந்து 37,753 புள்ளிகளாகவும் கணித்துள்ளனர். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 38,468 புள்ளிகளாகவும், இதனை தொடர்ந்து 38,659 புள்ளிகளாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கால் & புட் ஆப்சன் டேட்டா
சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரித்து வரும் நிலையில் கால் ஆப்சன் டேட்டா மற்றும் புட் ஆப்சன் என்பது நல்ல லாபகரமானதாக இருந்தாலும், மிக கவனமுடன் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. இதன் ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதமும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது.
ஹை டெலிவரி பர்சேன்டேஜ்
ஹை டெலிவரி பர்சேன்டேஜ் கொண்ட பங்குகள், முதலீட்டாளார்கள் அதிக ஆர்வம் காட்டும் பங்களாக உள்ளன. ஆக இதனை பொறுத்தும் சில இன்ட்ராடே வர்த்தகர்கள் வணிகம் செய்கின்றனர். இதில் IPCA லேபாரட்டீஸ், சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ, பிஎஃப்சி, பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன், ஆர் இ சி, ஹெச்டிஎஃப்சி, பவர் கிரிட் கார்ப், கோடக் பேங்க், Cumminsind, infy உள்ளிட்ட சில பங்குகள் இதில் அடங்கும். ள்ளன.
நீண்டகால நோக்கில் ஏற்றம் காண வாய்ப்பு
ஒரு பங்கின் விலை அதிகரிக்காமல் அதன் ஓபன் இன்ட்ரஸ்ட் அதிகரித்தால், அது நீண்டகால நோக்கில் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் எனலாம். ஆக இது ஓபன் இன்ட்ரஸ்ட் ரேட்டினையும் கவனத்தில் கொள்வது நல்லது. இப்படி கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகளில்
ஹிந்துஸ்தான் காப்பர்
கோல்கேட் பால்மோலிவ்
இந்தியா சிமெண்ட்ஸ்
எஸ்கார்ட்ஸ்
மேக்ஸ் பைனான்ஷியல் சர்வீசஸ்
டாடா கெமிக்கல்ஸ்
MGL
ஜுபிலண்ட் புட்
ஏபிபி உள்ளிட்ட பங்குகள் இதில் அடங்கும்.
சரிய வாய்ப்புகள்
ஒரு பங்கின் விலை சரியாமல், ஓபன் இன்ட்ரஸ்ட் அதிகரித்தால் அது, அப்பங்கின் விலை சரிவதற்கான வாய்ப்பாக இருக்கலாம்.
இதில் பிரமல் எண்டர்பிரைசஸ்
கேன் பின் ஹோம்ஸ்
பேங்க் ஆப் பரோடா
ஈச்சர் மோட்டார்ஸ்
இந்தஸிந்த் பேங்க் உள்ளிட்ட பங்குகள் அடங்கும்.
ஷார்ட் கவரிங்
ஒரு பங்கின் ஓபன் இன்ட்ரஸ்ட்ரேட் குறையும்போது, பங்கின் விலை அதிகரித்தால் அது ஷார்ட் கவரிங் ஆகவும் இருக்கலாம்.அப்படி பட்டியலிடப்படுள்ள சில பங்குகளில்
லூபின்
சின்ஜின் இண்டர்னேஷனல்
குஜராத் கேஸ்
NMDC
அப்போட் இந்தியா
பாட்டா இந்தியா
HONAUT
ALKEM
அதானி எண்டர் பிரைசஸ்
எம் ஆர் எஃப்
ஷார்ட் பில்டப்
ஒரு பங்கின் ஓபன் இன்ட்ரஸ்ட்ரேட் அதிகரித்து, விலை குறைந்தால், இந்த பங்கு விலையானது குறுகிய காலத்தில் ஏற்றம் காணலாம். இந்த பட்டியலில்
இன்ஃபோ எட்ஜ் இந்தியா
சிட்டி யூனியன் வங்கி
கோடக் மகேந்திரா வங்கி
சன் பார்மா
வோல்டாஸ் உள்ளிட்ட சில பங்குகள் அடங்கும்.
மொத்த ஒப்பந்தங்கள்
பிஎல்எஸ் இன்டர்நேஷனல் சர்வீசஸ்: இந்த நிறுவனத்தின் 11 லட்சம் ஈக்விட்டி பங்குகளை நோமுரா சிங்கப்பூர் நிறுவனம், திறந்த பரிவர்த்தனை மூலம், ஒரு பங்கின் சாரசரி விலை 230 ரூபாயில் வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தைரோகேர் டெக்னாலஜி: Fundsmith Emerging Equities Trust Plc இந்த நிறுவனத்தில் 2,68,707 ஈக்விட்டி பங்குகளை விற்பனை செய்யலாம் என தெரிகிறது. இதன் சராசரி விலை பங்குகு 614.79 ரூபாயாக உள்ளது.
இது தவிர சான்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
சிக்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
டெம்போ குளோபல் இந்த் லிமிடெட்
தைரோகேர் டெக்னாலஜி லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன.
முதலீட்டாளார்கள் கூட்டம்
ஆகஸ்ட் 30 அன்று எஸ் ஆர் எஃப், உஜ்ஜீவன் பைனான்ஸ் பேங்க், ப்ளூ ஸ்டார், கே இ ஐ இண்டஸ்ட்ரீஸ், எஸ் ஆர் எஃப், ப்ளு ஸ்டார், ஓன் 97 கம்யூனிகேஷன்ஸ், ஆசியான ஹவுஸிங், ஜி ஆர் இன்ஃப்ரா புராஜக்ட்ஸ், நுவோகா விஸ்டாஸ் கார்ப்பரேஷன், 3ஐ இன்ஃபோடெக், பதஞ்சலி ஃபுட்ஸ், பாலிகேப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் அதன் முதலீட்டாளர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளன.
பங்கு செய்திகள்
அக்ரோ கேப்பிட்டல், இக்ரா, கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ், ஓரியன்ட் சிமென்ட், ஸ்டார் ஹவுஸிங் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் கவனிக்க பட வேண்டிய பங்குகளாக உள்ளன.
அன்னிய முதலீடுகள்
ஆகஸ்ட் 29 நிலவரப்படி, என் எஸ் இ தரவுகளின் படி அன்னிய முதலீடானது 561.22 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வெளியேறியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் 144.08 கோடி ரூபாய் மதிப்பிலானபங்குகளை வாங்கியுள்ளனர்.
எஃப் & ஓ தடை
எஃப் & ஓ தடை பட்டியலில் தற்போது வரையில் எந்த பங்கும் கிடையாது. இன்றைய சந்தை அமர்வில் ஏதேனும் பங்குகள் இந்த தடை பட்டியலில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trade setup for Tuesday: Top 10 things to know before opening bell
Trade setup for Tuesday: Top 10 things to know before opening bell/இன்று சந்தையின் தலையெழுத்தினை தீர்மானிக்கும் 10 விஷயங்கள்.. எச்சரிக்கையா இருங்க!