வந்தவாசி: வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் கிராமத்தில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 45 பயணிகள் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு போக்குவரத்து பணிமனை பஸ் நேற்று காலை சென்னையிலிருந்து வந்தவாசி நோக்கி சென்றது. கீழ்கொடுங்காலூர் அருகே எதிரே வேலூரில் இருந்து மேல்மருவத்தூர் சென்ற மற்றொரு அரசு பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் அரசு பஸ் டிரைவர்கள் அண்ணாமலை (35),ராஜேந்திரன்(35), கண்டக்டர்கள் நாராயணமூர்த்தி (34),மணி (35), மேலும் 2 பஸ்களிலும் பயணம் செய்த 45க்கும் அதிகமான பயணிகள் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கீழ்க்கடுங்காலூர் போலீசார் வழக்கு பதிந்து அரசு பஸ் டிரைவர் ராஜேந்திரன் செல்போன் பேசியதால் விபத்து ஏற்பட்டதா என விசாரிக்கின்றனர்.