சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இந்தோனேஷியாவில் மக்கள் பீதி| Dinamalar

ஜகார்த்தா : இந்தோனேஷியாவில், நேற்று கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், மக்கள் பீதியடைந்தனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா, நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் மற்றும் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால், அடிக்கடி பாதிப்புக்குள்ளாகி வருகிறது.இந்நிலையில், இந்நாட்டின் சைபரட் நகரில், நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டடங்கள், வீடுகள் குலுங்கின. பீதியடைந்த மக்கள், பாதுகாப்புக்காக உயரமான நிலப்பரப்பிற்கு சென்றனர்.’ரிக்டர் அளவுகோலில், 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், சுனாமி அபாயம் இல்லை’ என, இந்தோனேஷிய வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்த தகவல் இல்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.