டெல்லி: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட தகவலில்ன் படி, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியலில் டெல்லியை அடுத்து மும்பையும், பெங்களூருவும் இடம் பெற்றுள்ளது.
டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஓராண்டில் 40 சதவிகிதம் அதிகரித்து 13,890 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. நாட்டில் அனைத்து பெருநகரங்களிலும் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லியின் பங்கு மட்டும் 32.2 சதவிகிதம் ஆகும். கடந்த ஆண்டு டெல்லியில் தினசரி 2 சிறுமிகள் வீதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருகின்றனர்.
தலைநகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடத்தல், கணவரின் கொடுமை, சிறுமி பாலியல் வன்கொடுமை ஆகியவை அதிக இடம் பிடித்துள்ளன. இதேபோல் சிறுவர்களால் குற்றச்செயல்கள் நடக்கும் அதிகம் நடக்கும் இடங்களில் டெல்லியை தொடர்ந்து சென்னையும் அகமதாபாத்தும் உள்ளன.