சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1.30 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர் மின் நிலையங்கள் வழியாக 23,000 கனஅடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக 1.07 லட்சம் கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1.30 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.