ரிஷிகேஷ் : உத்தரகண்டில், தாய், மனைவி மற்றும் மூன்று மகள்களை கழுத்தை அறுத்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ராணிபோகாரி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்குமார், 47. இவர், தன் தாய், மனைவி மற்றும் மூன்று மகள்களை நேற்று கழுத்தை அறுத்து கொலை செய்தார்.இதுதொடர்பான புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:
குடும்பத்தினர் ஐந்து பேரை கொலை செய்த மகேஷ்குமார், வேலையில்லாமல் இருந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவரது சகோதரர் தான் குடும்ப செலவுக்கு பணம் அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில், மகேஷ்குமார் தன் குடும்பத்துடன் நேற்று பிரார்த்தனை செய்தார்.பின், தன் தாய், மனைவி மற்றும் மூன்று மகள்களை கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார்.இந்த சம்பவம் நடந்தபோது, மகேஷ்குமாரின் இன்னொரு மகள், அவரது அத்தை வீட்டில் இருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரித்துவருகிறோம்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement