மயிலாடுதுறை; சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று நீர் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நாதல்படுகை, வெள்ளைமணல், கோரைத்திட்டு உள்ளிட்ட கிராம வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதிபட்டு வருகின்றனர். தண்ணீர் அதிகரிக்கும் என்பதால் தாழ்வான பகுதியில் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை அளிக்கப்பட்டது.