பாகிஸ்தானின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் சிக்கியிருப்பதாக அந்நாட்டின் சுற்றாடல் அமைச்சர் ஷெரி ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பருவ பெயர்ச்சி மழை ஆரம்பித்த கடந்த ஜூன் மாதத்திலிருந்து இதுவரை ஆயிரத்து 136 மரணங்கள் பதிவாகி உள்ளன. பல தசாப்தங்களின் பின்னர் அந்நாட்டில் கடுமையான மழை பெய்து வருகிறது. காலநிலை மாற்றமே இதற்கு காரணம் என, பாகிஸ்தான் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, பாகிஸ்தானை கடனிலிருந்து விடுவிக்கும் நிகழ்சித்திட்டத்தின் ஏழாவது மற்றும் எட்டாவது மீளாய்வுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி அளித்திருப்பதாக அந்நாட்டு நிதியமைச்சர் மிப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார். இதன்படி, நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தானுக்கு ஒன்று தசம் ஒன்று-ஏழு பில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.