தற்கொலை பட்டியலில் தமிழகத்துக்கு 2வது இடம்| Dinamalar

புதுடில்லி : தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கையில் மஹாராஷ்டிரா முதலிடமும், தமிழகம் இரண்டாம் இடமும் வகிப்பது தெரிய வந்துள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2021ல் நாடு முழுதும் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 033 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது, 2020ல் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து, 052 ஆக இருந்தது. கடந்த ஆண்டில் மஹாராஷ்டிராவில் 22 ஆயிரத்து 207 பேரும், தமிழகத்தில் 18 ஆயிரத்து 925 பேரும், மத்திய பிரதேசத்தில் 14 ஆயிரத்து 965 பேரும், மேற்கு வங்கத்தில் 13 ஆயிரத்து 500 பேரும், கர்நாடகாவில் 13 ஆயிரத்து 056 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.இந்த பட்டியலில் முதலிடத்தில் மஹாராஷ்டிராவும் இரண்டாவது இடத்தில் தமிழகமும் இருக்கின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.