உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் அதில் மூன்றாவது இடத்தை இந்தியாவின் அதானி பிடித்துள்ளார் என்பதை சற்றுமுன் பார்த்தோம்.
முதல் மூன்று இடங்களில் ஒருவராக இடம் பிடித்த முதல் இந்தியர் மட்டுமின்றி முதல் ஆசிய நாட்டை சேர்ந்தவர் என்ற பெருமையை அதானி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் உலக பணக்காரர் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள பணக்காரர்கள் யார் யார் என்பதை தற்போது பார்ப்போம்.
உலகின் 3வது பெரும் பணக்காரர் ஆனார் கௌதம் அதானி.. முதல் முறையாக ஒரு இந்தியர்..!
1. டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்
அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 251 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக உலகின் நம்பர் ஒன் பணக்காரர் பட்டியலில் உள்ளார் என்பதும் இவரை இப்போதைக்கு பின்னுக்கு தள்ள யாருமில்லை என்றே கூறப்பட்டு வருகிறது.
2 அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஜாஸ்
அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனத்தின் அதிபர் ஜெஃப் பிஜாஸ் அவர்கள் 153 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் கடந்த சில ஆண்டுகளாக இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது தெரிந்ததே.
3. கெளதம் அதானி
கடந்த ஆண்டு வரை மூன்றாவது இடத்தில் இருந்த லூயிஸ் உய்ட்டன் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் என்பவரை பின்னுக்கு தள்ளிவிட்டு மூன்றாவது இடத்தில் இந்தியாவின் கெளதம் அதானி பிடித்துள்ளார் இவருடைய சொத்து மதிப்பு 137.4 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
4. பெர்னார்ட் அர்னால்ட்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் 136 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
5. பில்கேட்ஸ்
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 117 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
6. வாரன் பஃபெட்
அமெரிக்காவை சேர்ந்த பங்கு வர்த்தக நிபுணர் வாரன் பஃபெட் 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளார்.
7. லாரி பேஜ்
49 வயதான பிரபல அமெரிக்க தொழிலதிபர் லாரிபேஜ் என்பவர் அதே 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார்
8. செர்ஜே பிரின்
அமெரிக்காவில் சேர்ந்த செர்ஜே பிரின் கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் என்பதும், இவரது சொத்து மதிப்பு 95.8 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளார்.
9. ஸ்டீவ் பால்மெர்
பிரபல அமெரிக்க அதொழிலதிபர் ஸ்டீவ் பால்மெர், 93.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளார்.
10. லாரி எல்லிசன்
அமெரிக்காவின் மாபெரும் தொழிலதிபர்களில் ஒருவரான லாரி எல்லிசன், 93.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை உடையவர். இவர் உலக பணக்காரர் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார்.
8 அமெரிக்கர்கள்
உலக பணக்காரர் பட்டியலில் முதல் 10 இடத்தில் உள்ளவர்களில் 8 பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்பதும் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர் என்பதும் இன்னொருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Who are now the world’s 10 wealthiest people as Adani becomes 3rd richest?
Who are now the world’s 10 wealthiest people as Adani becomes 3rd richest? | உலக பணக்காரர் பட்டியல்.. 3வது இடத்தில் அதானி.. முதல் 10 இடங்களில் யார் யார்?