மாடர்ன் தியேட்டர்: MGR, கருணாநிதியின் திரைவாழ்வின் அங்கம்; 129 படங்கள் தயாரித்த இடத்தின் அவல நிலை!

மார்டன் தியேட்டர்ஸ். கருணாநிதியை ஆரம்ப காலத்திலேயே திரைத்துறைக்குக் சரியாகக் கணித்து அவரை அழைத்து வந்து தங்கள் நிறுவனத்துடன் இணைத்துன் கொண்டனர். கருணாநிதியின் கூர்மையான வசனங்கள் பலவும். உருவான இடம். மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனர் டி.ஆர். சுந்தரத்துக்கு இன்று 59வது நினைவு தினம்.

டி.ஆர்.சுந்தரம்

இந்தச் சூழலில் சேலத்தில் மார்டன் தியேட்டர்ஸ் நினைவாக எஞ்சிருக்கும் ஸ்டூடியோவின் நுழைவாயிலான ஆர்ச் இடிக்கப்பட இருப்பதாக சேலத்தில் இருந்து தகவல் கிடைக்க, டி.ஆர்.சுந்தரத்தின் கொள்ளுப் பேரனான கார்த்திகேயனிடம் பேசினோம்.

“மார்டர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ இயங்கிக் கொண்டிருந்த இடம் 20 ஆண்டுகளுக்கு முன்னாடி ‘முதியோர் இல்லம்’ ஒன்றிற்கு கொடுக்கப்பட்டது. 10 ஏக்கருக்கும் அதிகமான அந்த இடத்தில் மார்டர்ன் தியேட்டர்ஸ்னு பொறிக்கப்பட்ட நுழைவாயில் அதாவது ஆர்ச்சும் அடங்கும். `முதியோர் இல்லம்’ அமைவதற்காகன்னு கேட்கப்பட்டதால குறைவான விலைக்குத்தான் எங்க குடும்பம் இடத்தை வித்திருக்காங்க.வாங்கினவங்க தரப்புல ஆர்ச் இருக்கிற இடம் ‘மார்டன் தியேட்டர்ஸ் நினைவாக அப்படியே இருக்கும்’னு சொன்னதாச் சொல்றாங்க.

மாடர்ன் தியேட்டர்

பிறகு, எங்ககிட்ட இருந்து இடத்தை வாங்கிய தரப்புக்கு பண நெருக்கடி வர அவங்க இன்னொருத்தருக்கு விக்க, அங்க இருந்தும் கைமாறி இப்ப நாலாவது தரப்புக்கு இடம் கை மாறிடுச்சு. சில மாதங்களுக்கு முன்னாடி திடீர்னு ஒருநாள் அந்த ஆர்ச்சை இடிக்கப் போறாங்கன்னு செய்தி கேள்விபட்டோம். அந்தப் பகுதி மக்கள் திரண்டு போய் எதிர்ப்பு தெரிவிச்சதால அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் தெரிய வந்துச்சு. இந்தத் தகவல் எங்களுக்கு வருத்தத்தை தந்துச்சு.

இதற்கிடையில சில வருஷங்களுக்கு முன்னாடி டி.ஆர்.சுந்தரத்துக்கு ரெண்டு வெண்கலைச் சிலைகள் செய்து சேலத்தில் நிறுவ தயாரிப்பாளர் சங்கத்தால் முயற்சி எடுக்கப்பட்டு சிலைகளும் செய்யப்பட்டன. ஒரு சிலையை சேலம் நகரத்துல அவர் அலுவலகமா பயன்படுத்தி வந்த கட்டடத்துல நிறுவியாச்சு. இன்னொரு சிலையை மார்டன் தியேட்டர்ஸ் ஆர்ச் பக்கத்துல வைக்கணும்கிறதுதான் திட்டம். ஆனா ஆர்ச் இடம் கை மாறினதால சிலையை அங்க வைக்க முடியல. இன்னைக்கு சேலத்துல முன்னாள் முதல்வர் கலைஞரின் நண்பர் ஒருத்தர் வீட்டுக் கார் ஷெட்டில் இருக்கு அந்தச் சிலை.

மாடர்ன் தியேட்டர்

தமிழ் சினிமாவுக்கே முன்னோடி இந்த நிறுவனம். 129 படங்கள் தயாரிச்சிருக்கு மார்டன் தியேட்டர்ஸ். எம்.ஜி.ஆர், கலைஞர், கவிஞர் கண்ணதாசன், டி.ஆர்.மகாலிங்கம், ஜானகி ராமச்சந்திரன், என்.டி.ஆர். முரசொலி மாறன்னு பிற்காலத்துல பெரிய பெரிய ஆளுமைகளா வந்தவங்கெல்லாம் புழங்கிய இடம் இது. அந்தச் சாதனைகளுக்கெல்லாம் அடையாளமா இப்ப மிச்சமிருக்கிறது இந்த ஒரு ஆர்ச்தான். எங்களால் கோரிக்கை மட்டுமே வைக்க முடியும்கிற சூழல்ல இருக்கோம்.

அதனால திரைத்துறையில் இருந்து வந்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்துல தலையிட்டு சேலத்தின் பழமையான அடையாளமான இந்த ஆர்ச்சை ஒரு நினைவுச் சின்னமா அமைக்க நடவடிக்கை எடுக்கணும்கிறதுதான் எங்க குடும்பத்தினர் வேண்டுகோள் மட்டுமில்ல, சேலம் மக்களின் வேண்டுகோளும் கூட..

கார்த்திகேயன்

ரெண்டு மாசம் முன்னாடி சென்னை வந்திருந்த நான் இது தொடர்பாக பூச்சி முருகனைச் சந்தித்துக் கோரிக்கை வைத்தேன். (அவருடைய அப்பாவும் கூட மார்டன் தியேட்டர்ஸ்ல வேலை பார்த்தவர்) முதல்வர் பார்வைக்கு நிச்சயம் கொண்டு போறேன்னு சொல்லியிருக்கார் அவர்” என வேதனையுடன் தெரிவித்தார் கார்த்திகேயன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.