கடந்த வருடத்திற்கு அமைவாக நடைபெற்ற கல்வி பொதுத்தராதார சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றுபரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
பரீட்சை திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
பரீட்சையின் செயல்முறை பரீட்சை அடுத்த மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகும். சாதாரண தர பரீட்சை கடந்த மே மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெற்றது.
இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மொத்த விண்ணப்பதாரிகளில் பத்தாயிரம் பேர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தியை பெற்றிருப்பதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
இது மொத்த மாணவர்களில் மூன்று தசம் ஆறு-ஏழு வீதமாகும். மூன்று ஏ சித்திகளையும் பெற்றவர்களில் ஒன்பதாயிரத்து 313 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் ஆவர்.