பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை.. ஆண் நண்பரை அள்ளியது போலீஸ்..!

பிரபல நடிகை அமலா பாலுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக அவரது நண்பரும், படத் தயாரிப்பாளருமான பவ்நிந்தர் சிங் பூவி கைது செய்யப்பட்டார்.

நடிகை அமலாபால் திரைப்படத் தொழிலில் ஏற்பட்ட நட்பு காரணமாக பவ்நிந்தர் சிங் தத் (எ) பூவி என்பவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அவருடன் மட்டுமின்றி அவருடைய குடும்பத்தினரிடமும் அமலாபால் நெருங்கிய நட்புடன் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், பவ்நிந்தர் சிங் தத் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து அமலாபால் திரைப்பட நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருந்தாராம்.

அந்த நிறுவனத்துக்காக 2018-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகில் உள்ள பெரியமுதலியார் சாவடியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்துள்ளனர்.

அமலாபால் மற்றும் பவ்நிந்தர் சிங் தத் ஆகிய இருவரும் ஒன்றாக அங்கு தங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பவ்நிந்தர் சிங் தத், அமலாபாலுடன் ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட பாலியல் தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக அமலாபாலுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அமலாபால், இது குறித்து விழுப்புரம் மாவட்ட போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரில், “பவ்நிந்தர் சிங் தத்தும், அவரது உறவினர்களும் என்னை ஏமாற்றியதுடன், அச்சுறுத்தியும், கொலை மிரட்டல் விடுத்தும், பணம் மற்றும் சொத்துக்களை மோசடி செய்துள்ளனர்.

அதனால், எனக்கு மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் துன்புறுத்தல்கள் செய்துள்ளனர். அதனால், மேற்படி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 16 பிரிவுகளின் கீழ் நேற்றைய தினம் வழக்குப்பதிவு செய்தனர். அதன் அடிப்படையில், பவ்நிந்தர் சிங் தத் (எ) பூவி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகை அமலாபாலின் குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.