தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் புதிய அத்தியாயம்.. ஐபிஓ என்று.. விலை எவ்வளவு?

சென்னை: தனியார் துறையை சேர்ந்த வங்கியான தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அடுத்த வாரத்தில் தனது பொதுப் பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது.

இந்த பொதுப் பங்கு வெளியீடானது சிறு முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

இதன் வெளியீட்டு தேதியானது செப்டம்பர் 5 அன்று தொடங்கவுள்ளது. இந்த வெளியிட்டிற்கான கடைசி தேதி செப்டம்பர் 7 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி வங்கி உட்பட 8 வங்கிகள் மீது RBI அபராதம் விதித்துள்ளது..!

விலை எப்படி?

விலை எப்படி?

இந்த பொது பங்கு வெளியீட்டிந் மதிப்பானது 800 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. இந்த பங்கு வெளியீட்டில் விலையானது 500 – 525 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் லாட் சைஸ் 28 பங்குகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக நீங்கள் அதிக பங்குகளை வாங்க வேண்டுமெனில் அதன் மடங்கில் வாங்க வேண்டும்.

 

பழமையான வங்கி

பழமையான வங்கி

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் பழமையான தனியார் வங்கியாகும். கிட்டதட்ட 100 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட ஒரு நிறுவனமாகும். இது வங்கி மற்றும் நிதி சேவைகளை வழங்கி வரும் ஒரு வங்கியாகும். குறிப்பாக சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு தனது வங்கி சேவையினை வழங்கி வருகின்றது.

சில்லறை வாடிக்கையாளர்களுக்கு?
 

சில்லறை வாடிக்கையாளர்களுக்கு?

இந்த வெளியீட்டில் 10% சில்லறை வாடிக்கையாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கியின் காசா விகிதம் (Current account and savings account deposits) 30.50% ஆக உள்ளது. இவ்வங்கியின் கடந்த நிதியாண்டிற்கான CAGR விகிதம் 41.99% அதிகரித்துள்ளது. இதன் நிகரலாபம் கடந்த நிதியாண்டில் 820 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

 

எவ்வளவு அதிகபட்ச முதலீடு?

எவ்வளவு அதிகபட்ச முதலீடு?

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி இந்த வெளியீட்டின் மூலம் 831.60 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளது. ஒரு முதலீட்டாளர் அதிகபட்சமாக 13 லாட்களை வாங்கிக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. ஆக முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 14,700 ரூபாயில் இருந்து, அதிகபட்சமாக 1,91,100 ருபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம்.

எப்போது பட்டியல்?

எப்போது பட்டியல்?

செப்டம்பர் 12 அன்று யாருக்கு எவ்வளவு பங்கு ஒதுக்கீடு என்பதை முடி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பங்குகள் என் எஸ் இ மற்றும் பி எஸ் இ-யில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பங்கினை செப்டம்பர் 15 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இருப்பு என்ன?

இருப்பு என்ன?

மார்ச் 31, 2022 நிலவரப்படி, இவ்வங்கி 509 கிளைகளை கொண்டுள்ளது. இதில் 106 கிளைகள் கிராமப்புற பகுதிகளிலும், 80 சிறு நகரங்களிலும், 76 மெட்ரோ நகரங்களிலும் உள்ளது. இது தமிழகத்தில் தான் அதிக கிளைகளை கொண்டுள்ளது. தமிழகத்தில் 369 கிளைகளை கொண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tamilnadu mercantile Bank IPO opens next week: check key details here

Tamilnadu mercantile Bank IPO opens next week: check key details here/தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் புதிய அத்தியாயம்.. ஐபிஓ என்று.. விலை எவ்வளவு?

Story first published: Tuesday, August 30, 2022, 15:04 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.