யுரேனியம் பங்கு திடீர் உயர்வு.. ஆர்டர் குவிகிறதாம்..!!

உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் அணுசக்தியின் நன்மைகளை உலக நாடுகளின் தலைவர்கள் திடீரெனப் பாராட்டி வருவதால் யுரேனியம் பங்குகள் தடாலடியாக உயர்ந்து வருகிறது.

யுரேனியம், அணுசக்தி என்ற பெயரை கேட்டாலே கதிகலங்கிக் கொண்டு இருந்த உலக நாடுகள் தற்போது தலைகீழாக மாறியுள்ளது. பெரும்பாலான நாடுகள் இந்தியா உட்பட அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கத் திட்டம் தீட்டி வருகிறது.

இதற்கிடையில் எனர்ஜி துறை மீது அதிகம் அக்கறை கொண்ட எலான் மஸ்க்-ம் அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பைப் பெரிய அளவில் ஆதரித்துப் பேசியுள்ளார்.

குஜராத், ராஜஸ்தான் ஆலைகளில் முதலீடு.. என்டிபிசி ஆர்இஎல் ரூ.500 கோடி வங்கி கடன் பெற ஒப்புதல்..!

 யுரேனியம் உற்பத்தி

யுரேனியம் உற்பத்தி

திங்கட்கிழமை வர்த்தகத்தில் யுரேனியம் உற்பத்தி செய்யும் சுரங்க நிறுவனமான Cameco-வின் பங்குகள் 10 சதவீதம் வரையில் உயர்ந்தன, அதே நேரத்தில் குளோபல் எக்ஸ் யுரேனியம் ஈடிஎஃப் விலை 7 சதவீதம் வரை உயர்ந்தது. இதேபோல் கடந்த ஒரு வாரத்தில், Cameco பங்கு 28 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, Uranium ETF கிட்டத்தட்ட 20% உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா உக்ரைன் போர்

ரஷ்யா உக்ரைன் போர்

ரஷ்யா உக்ரைன் போர் துவங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு அணுசக்தித் துறையில் மறுமலர்ச்சி உருவாகியுள்ளது, ரஷ்யாவின் எண்ணெய் சந்தைகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் குவிந்துள்ளதால் எரிபொருட்கள் விலைகள் அதிகரித்தது மற்றும் ஐரோப்பாவிற்கு அதன் இயற்கை எரிவாயு ஏற்றுமதியை ரஷ்யா பெரிய அளவில் குறைத்துள்ளது.

 OPEC நாடுகள்
 

OPEC நாடுகள்

ரஷ்யா உக்ரைன் போருக்கு பின்பு உலக நாடுகள் எந்த அளவிற்கு எரிபொருளுக்காக ஒரு சில நாடுகளை மட்டுமே நம்பியிருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக ரஷ்யா உக்ரைன் போருக்கு பின்பு OPEC நாடுகள் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்காதது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மறக்க முடியாது.

அணுசக்தி மின்சாரம்

அணுசக்தி மின்சாரம்

இந்த நிலையில் அணுசக்தி மீதான எண்ணம் பல நாடுகளுக்கு மாறியுள்ளது, இதனால் தற்போது அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது என்பது ஒரு சுத்தமான வடிவமாகும், ஆனால் யுரேனியக் கழிவுகள் முறையாகவும், பாதுகாப்பாகவும் சேமிக்கப்படும் போது மட்டுமே இது சாத்தியம் எனப் பேசத் துவங்கியுள்ளது.

மலிவானது

மலிவானது

இதேபோல் அணுசக்தி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையம் கட்டப்பட்ட பிறகு செயல்படுவது ஒப்பீட்டளவில் மலிவானது. இந்த இக்கட்டான நிலையைப் புரிந்துகொண்டு, பெல்ஜியம் தனது இரண்டு அணுமின் நிலையங்களின் உரிமங்களை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, பிரான்ஸ் இப்பட்டியலில் இணைந்துள்ளது.

ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையம்

ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையம்

ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையத்தைச் சுனாமி சேதப்படுத்திய பின்னர், 10 ஆண்டுகளுக்குப் பின் அணுசக்திக்கு ஒரு முக்கியத் திருப்புமுனையாக மாறக்கூடிய நிலையில் புதிய அணுசக்தி மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கு ஜப்பான் ஒப்புதல் சிக்னல் கொடுத்துள்ளது.

எலான் மஸ்க் திடீர் மனமாற்றம்.. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு அதிகமாக தேவை..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Uranium stocks growing stronger after countries support Nuclear power

Uranium stocks growing stronger after countries support Nuclear power யுரேனியம் பங்கு திடீர் உயர்வு.. ஆர்டர் குவிகிறதாம்..!!

Story first published: Tuesday, August 30, 2022, 16:16 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.