Ganesh Chaturthi: செல்வ கணபதிக்கு 316 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி

விநாயக சதுர்த்தி 2022: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக ₹316 கோடி காப்பீடு செய்யப்பட்டுள்ளது .மும்பையில் உள்ள விநாயகர் சதுர்த்தி திருவிழாக் க்குழுவான கணபதி மண்டல் 316 கோடி ரூபாய்க்கு காப்பீட்டு பாலிசி எடுத்துள்ளது. இந்த காப்பீட்டில் தங்கம், வெள்ளி மற்றும் இதர மதிப்புமிக்க பொருட்களுக்கான ₹31.97 கோடி அடங்கும். இதைத் தவிர, பந்தல், தன்னார்வலர்கள், பூசாரிகள், சமையல்காரர்கள், காலணி கடை ஊழியர்கள், பார்க்கிங் இடத்தில் பணிபுரியும் நபர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு என ₹263 கோடி தனிநபர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மும்பையின் மாதுங்காவில் உள்ள விநாயகர் மண்டல் குழுக்களில் ஒன்றான ஜிஎஸ்பி சேவா மண்டல், வரவிருக்கும் கணபதி திருவிழாவிற்காக ₹316.40 கோடி இன்சூரன்ஸ் தொகையை எடுத்துள்ளதாக PTI நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த காப்பீடு தொடர்பாக மும்பையில் உள்ள கிங்ஸ் சர்க்கிளில் அமைந்துள்ள ஜிஎஸ்பி சேவா மண்டல் தலைவர் விஜய் காமத் இவ்வாறு கூறுகிறார்: “புதன்கிழமை தொடங்குகி, 10 நாடகள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு காப்பீடு செய்துள்ளோம். கடவுளின் நகைகள், விலையுயர்ந்த பொருட்கள், மண்டலை சேர்ந்தவர்கள், பணியாளர்கள், விநாயகர் பூஜைக்கு வருகை தரும் பக்தர்களுக்கும் காப்பீட்டு பாதுகாப்பு உண்டு.”

₹316.4 கோடி மதிப்புள்ள காப்பீட்டில் தங்கம், வெள்ளி மற்றும் இதர மதிப்புமிக்க பொருட்களுக்கான ₹31.97 கோடியும், பந்தல், தன்னார்வலர்கள், பூசாரிகள், சமையல்காரர்கள், காலணி கடை ஊழியர்கள், வாலட் பார்க்கிங் நபர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு ₹263 கோடி தனிநபர் காப்பீடும் அடங்கும்.

பர்னிச்சர்கள், சாதனங்கள்,  கம்ப்யூட்டர்கள், சிசிடிவிகள் மற்றும் ஸ்கேனர்கள் போன்ற கருவிகளுக்கு பூகம்ப அபாயத்துடன் கூடிய ₹ஒரு கோடி காப்ப்பீடு மற்றும் தீ மற்றும் சிறப்பு ஆபத்துக் பாலிசியும் எடுக்கப்பட்டுள்ளது.

பூஜைக்கு வரும் ஒவ்வொரு பக்தர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுபு எடுத்துக் கொள்கிறோம். விநாயகர் பூஜையை சிறப்பாக நடத்துவது மட்டுமல்ல, பத்து நாட்கள் கொண்டாட்டத்திற்காக மிகவும் அதிக அளவில் வருகை தரும் பக்தர்களை முறைப்படுத்துவது மட்டுமல்ல, . நாங்கள் மிகவும் ஒழுக்கமான கணேஷ் மண்டலம், எனவே பாப்பா (கணேஷ் கடவுள்) ஒவ்வொரு பக்தர் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு,” காமத் கூறினார். GSB சேவா மண்டல் தனது 68வது ஆண்டு கணபதி விழாவைக் கொண்டாடுகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.