மதுரை: சேலத்தை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் விடுதலையை கோகுல்ராஜ் தாயார் சித்ரா மேல்முறையீடு செய்துள்ளார். ஐகோர்ட் மதுரைக் கிளையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்துள்ளது.