பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பினால் அங்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து உணவுப் பொருட்களைஇறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாக, பாகிஸ்தான் நாட்டு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்
பாகிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக அங்கு உற்பத்தியானது பெரும் சேதம் கண்டுள்ளது. ஏற்கனவே அங்கு விலைவாசியானது கடும் உச்சத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது வெள்ளத்தால் இன்னும் கடுமையான சூழல் உருவாகியுள்ளது.
இதற்கிடையில் பாகிஸ்தான் அரசு விலைவாசியினை கட்டுக்குள் கொண்டு வர, தக்காளி மற்றும் வெங்காயத்தினை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுகிழமையன்று, லாகூர் சந்தையில் தக்காளி மற்றும் வெங்காயம் விலை கிலோவுக்கு, முறையே 500 ரூபாய் மற்றும் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், தற்போது சர்பாஸ் சாரிஃப் புதிய பதவியேற்றார். இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு, பெட்ரோல் ,டீசல் விலை உயர்ந்த நிலையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் குறைந்ததால் அங்கு பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கியுள்ளது.
இந்தநிலையில், பாகிஸ்தானில் பருவமழை பெய்து வருகிறது. இங்கு கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு சிந்த் மகாணம், கைபர், பக்துங்க்வா, பலோசிஸ்தான் ஆகிய மாகாணங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.இதனால் அங்கு தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அந்த நாட்டில் மொத்தம் 3 கோடியே 30 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 1200க்கும் மேற்பட்டடோர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டில் மழை வெள்ளத்தால் பயிர்கள் பெருமளவில் அழிந்து நாசமடைந்துள்ளதால், உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே அதைச் சமாளிக்க வேண்டி, இந்தியாவில் இருந்து உணவுப் பொருட்களைஇறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாக, பாகிஸ்தான் நாட்டு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.