அதிமுக அலுவலகத்தில் சசிகலா; ஆரம்பம் ஆகும் 2வது இன்னிங்ஸ்!

ஜெயலலிதா மறைக்கு பின்னர் சசிகலாவுக்கு டிமிக்கி கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி பிரிந்து சென்ற ஓபிஎஸ்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மீண்டும் ஒன்றாக இணைந்தனர்.

இதனை தொடர்ந்து கட்சியையும், ஆட்சியையும் ஒருதாய் சகோதரர்கள் போல வழிநடத்திய நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக படுதோல்வி அடைந்தது.

இதன் எதிரொலியாக கட்சியை வழிநடத்த எடப்பாடி பழனிச்சாமிக்கு தகுதி இல்லை என்று விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் எடப்பாடி அதிமுகவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

இதன் தொடர்ச்சியாக பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியை எடப்பாடி பழனிச்சாமி உருவாக்கி அதை தனதாக்கிக் கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி கட்சியைவிட்டே நீக்கி அதிரடி காட்டினார். இதனால் டென்ஷன் ஆன ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தொடர்ந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக வந்ததால் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் மீண்டும் ஓபிஎஸ் அணிக்கு மாறி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே அதிமுகவை ஒற்றுமையாக கொண்டு செல்ல எடப்பாடி பழனிச்சாமி,

, டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கு ஓபிஎஸ் பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.

இதை சற்றும் எதிர்பாராத எடப்பாடி பழனிச்சாமி இனி.. ஓபிஎஸ்சுடன் இணைந்து செயல்பட முடியாது என தெளிவாக கூறிவிட்டார். அதே சமயம், டிடிவி தினகரன் அதிமுகவுடன் மீண்டும் இணைந்து செயல்பட விருப்பம் காட்டி வருகிறது.

ஓபிஎஸ்சுக்கு பின்னால் இருந்து இயக்குவதாக சொல்லப்பட்டாலும், இன்னமும் இது தொடர்பாக சசிகலா வாயை திறக்கவில்லை. ஆனால், அவரது ஆதரவாளர்கள் ஓபிஎஸ்சை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சட்டென மாறிய ஓ.பி.எஸ் மனநிலையை கொஞ்சமும் எதிர்பார்க்காத எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வழக்கில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த மேல்முறையீடு வழக்கிலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வக்கீல்கள் சரியான வாதத்தை எடுத்து வைக்கவில்லை என கூறப்படுகிறது. இதை சாதகமாக்கிய ஓபிஎஸ் தரப்பு வக்கீல்கள் ஆதி முதல் அந்தம் வரை அதிமுக சட்ட விதிகளை அள்ளி தெளித்து, வழக்கை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

எனவே, இந்த வழக்கிலும் எடப்பாடி பழனிச்சாமிக்கே பின்னடைவு ஏற்படும் என, சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று அதிமுக அலுவலகத்துக்கு சசிகலா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போதையை சூழலில், அதிமுக அதிகாரப்பூர்வ ஒருங்கிணைப்பாளராக

உள்ளார். எடப்பாடி பழனிச்சாமியோ எந்த வித பதவியும் இல்லாமல் சாதாரண உறுப்பினராக மட்டும் இருக்கிறார்.

அப்படி இருக்கும்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமே பகிரங்கமாக அழைப்பு விடுத்து இருப்பது சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு பழைய உற்சாகத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாக காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்கிணங்க, அதிமுக அலுவலகத்துக்கு தன் படை மற்றும் பரிவாரங்களுடன் வர சசிகலா திட்டமிட்டுள்ளார்.

தற்போது எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு வழக்கு தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் நிலை உள்ளது. இதிலும் ஓபிஎஸ்சுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அதிமுக அலுவலகத்துக்கு சசிகலா வருவது உறுதி என கூறப்படுகிறது.

பதவியை ராஜினாமா செய்ய நான் தயார்; இபிஎஸ் தயாரா? ஓபிஎஸ் சவால்!

ஒருவேளை சசிகலா அதிமுக அலுவலகம் வரும் பட்சத்தில் மீண்டும் அவரது கையே ஓங்கும். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இன்னாள் எம்.எல்.ஏக்கள் பலரும் தேடி வந்து வாழ்த்துவார்கள் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.