உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.
நாளை மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ள வானிலை மையம், இன்று முதல் 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
தென் தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.