கோட்டார் ஏழகரம் பெருமாள் கோயில் திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது

நாகர்கோவில்: கோட்டார் ஏழகரம் பெருமாள் கோயில் ஆவணி மாத தேரோட்ட திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோட்டார் ஏழகரத்தில் பிரசித்தி பெற்ற பொன்பொருந்தி நின்று அருளிய பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வருடம்தோறும் ஆவணி மாதம் தேரோட்ட திருவிழா 10 நாட்கள் மிகவும் விமர்சையாக நடப்பது வழக்கம். இந்த வருடத்திற்கான ஆவணி மாத தோரோட்ட திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் பெருமாள் பல்வேறு வாகனங்கள் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

மேலும் 4ம் திருவிழா, 7ம் திருவிழா நாள் அன்று பெருமாள் ஆதிஷேசவாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவின் 9ம் நாள் தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை அமைச்சர் மனோதங்கராஜ் வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்.  இந்த நிகழ்ச்சியில் மேயர் மகேஷ், எம்ஆர்காந்தி எம்எல்ஏ மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தசேவா அமைப்பினர், பக்தர்கள் திரளாக கலந்துகொள்கின்றனர். 10ம் திருவிழா வருகிற 8ம் தேதி நடக்கிறது. அன்று ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவையொட்டி தினமும் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இன்று நடந்த  கொடியேற்று நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.