சஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிரான வழக்கு விசாரணை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு (Photos)


உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில் பொலிஸாரினால் எழுப்பப்பட்ட ஆட்சேபனை தொடர்பில் எழுத்து மூலம் சமர்ப்பிப்பதற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 திகதி வரை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் இன்று (30)விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பிரதிவாதியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ரூஸ்தி ஹபீப் முஹமட் அக்ரம் உட்பட சலாகுதீன் சப்றீன் மூவரும் முன்னிலையாகியிருந்தனர்.

சஹ்ரான் ஹாஷிம் மற்றும் புலஸ்தினி  

சஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிரான வழக்கு விசாரணை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு (Photos) | Easter Attack Sri Lanka Today Police Investigation

மேலும் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் தப்பி சென்றதாக கூறப்படும் புலஸ்தினி உறவு தொடர்பில் மறைத்தமை சஹ்ரானின் மனைவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களாகும்.  

குற்றப்புலனாய்வு பிரிவானது மனைவியிடம் 4 வாக்கு மூலங்களை பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நான்கு வாக்குமூலங்களும் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது தொடர்பிலான கேள்விகளை பொலிஸார் மன்றில் எழுப்பியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தொடரும் வழக்கு விசாரணை

சஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிரான வழக்கு விசாரணை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு (Photos) | Easter Attack Sri Lanka Today Police Investigation

இதனையடுத்து மீண்டும் நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸினால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 திகதிக்கு குறித்த வழக்கு மறு தவணை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இது தவிர கடந்த கால வழக்கு தவணைகளின் போது குற்றப்பத்திரத்தின் இணைப்பு ஆவணங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதால் அவை தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்படல் வேண்டும் எனவும் அப்போதே பிரதிவாதிக்கு தன் பக்க நியாயங்களை முன்வைக்க முடியுமாக இருக்கும் எனவும் ஹாதியாவின் சட்டத்தரணியால் சுட்டிக்காட்டப்படிருந்தது.

அதன்படி கடந்த தவணையில் நீதிமன்றம் பிரதிவாதியான சஹ்ரானின் மனைவிற்கு எதிரான குற்றப்பத்திரத்தின் இணைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பு வழக்கு விசாரணையின்போது அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரனால் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.