தமிழரான ஷிவ் நாடார் உருவாக்கிய HCL டெக்னாலஜிஸ் கடந்த நான்கு ஆண்டுகளாக வருமானத்தின் அடிப்படையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக உள்ளது.
ஆனால் சந்தை அதை ஒருபோதும் பார்க்கவில்லை, ஏனெனில் விப்ரோ நிறுவனத்தின் மார்க்கெட் கேப் அளவீடுகள் மூலம் தொடர்ந்து மூன்றாவது பெரிய ஐடி நிறுவனம் என்ற பெயரை தக்க வைத்துக் கொண்டது.
இந்நிலையில் தற்போது நிலைமை மொத்தமாக மாறியுள்ளது.
5G முதல் அரிசு மாவு வரை.. 3 புதிய வர்த்தகம்.. ரிலையன்ஸ் மாஸ்டர் பிளான்..!
இந்திய ஐடி சேவை துறை
இந்திய ஐடி சேவை துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் விப்ரோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.2 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் நிலையில், ஹெச்சிஎல் டெக் தனது சிறப்பான வளர்ச்சி மூலம் 2.5 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டை பெற்று விப்ரோ-வை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
4 வருடம்
vஇதன் மூலம் 4 வருடமாக முதலீட்டு சந்தைக்கும், முதலீட்டாளர்களுக்கும் உணர்த்தப் போராடி வந்த ஹெச்சிஎல் நிறுவனம் தற்போது தனது சிறப்பான செயல்பாடுகளால் முதலீட்டு சந்தை எதிர்பார்க்கும் சந்தை மதிப்பீட்டு அளவிலேயே நிருப்பித்துள்ளது.
ஹெச்சிஎல் – விப்ரோ
ஆனால் ஹெச்சிஎல் நிறுவனத்தின் வெற்றி அதன் பங்கு விலை உயர்ந்ததால் அல்ல, இரு நிறுவனங்களின் பங்குகள் பெரிய அளவில் குறைந்திருந்தாலும் விப்ரோ பங்குகள் அதிகளவில் குறைந்த நிலையில் ஹெச்சிஎல் சற்று குறைவாகக் குறைந்து போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.
டாப் 4 ஐடி சேவை நிறுவனங்கள்
விப்ரோ, ஹெச்சிஎல் மட்டும் தான் இப்படியா என்றால் நிச்சயம் இல்லை டாப் 4 ஐடி சேவை நிறுவனங்களும் சரிந்துள்ளது. ஆனால் விப்ரோ மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 30 வர்த்தக முடிவில் டிசிஎஸ் 17 சதவீத சரிவு, இன்போசிஸ் 22 சதவீத சரிவு, ஹெச்சிஎல் டெக் 29 சதவீத சரிவு, டெக் மஹிந்திரா 40 சதவீத சரிவு, விப்ரோ 42 சதவீத சரிவு.
வருவாய் லாபம்
இதேவேளையில் மார்ச் 31 உடன் முடிந்த 2022 ஆம் நிதியாண்டில் ஹெச்சிஎல் நிறுவனம் 85,651 கோடி ரூபாயை வருவாயாகப் பெற்ற நிலையில் விப்ரோ 79,093 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளது.
இதேபோல் ஹெச்சிஎல் நிறுவனம் 13,524 கோடி ரூபாயை மொத்த லாபமாகப் பெற்ற நிலையில் விப்ரோ 12,238 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளது.
மேலும் ஹெச்சிஎல் நிறுவனம் 2,10,966 ஊழியர்களைக் கொண்டுள்ள நிலையில் விப்ரோ 2,58,574 ஊழியர்களைக் கொண்டு உள்ளது
HCL Tech beats Wipro; HCL Emerges as India’s third largest IT company
HCL Tech beats Wipro; HCL Emerges as India’s third largest IT company | HCL: சாதித்துக் காட்டிய ஷிவ் நாடார்.. டிசிஎஸ், இன்போசிஸ் அடுத்தது ஹெச்சிஎல் டெக்..!