பாஜக விலைக்கு வாங்கிருவார்கள் என பயம்: எம்எல்ஏக்களை கொத்தாக சத்தீஸ்கார் ரிசார்டுக்கு மாற்றிய ஹேமந்த்

ராஞ்சி: ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தகுதி நீக்கம் தொடர்பாக ஆளுநர் இன்னும் தனது முடிவை அறிவிக்காமல் இருந்து வரும் நிலையில், பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடலாம் என்ற அச்சத்தில் தனது கட்சி எம்.எல்.ஏக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக ஹேமந்த் சோரன் அவசரமாக சத்தீஸ்கார் மாநிலத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

82 உறுப்பினர்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சிக்கு 30 எம்எல்ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 17 உறுப்பினர்களும் உள்ளனர்.

பாஜக வழக்கு

பிரதான எதிர்க்கட்சியான பாஜக.வுக்கு 25 உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரன், கடந்த ஆண்டு அரசு ஒப்பந்தமான சுரங்க ஒதுக்கீடு ஒன்றை தன் பெயரிலேயே ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வர் பதவியில் இருந்து கொண்டு இந்த ஒபந்தத்தை செய்தது அதிகார துஷ்பிரயோகம் என்றும் ஹேமந்த் சோரன் மீது பாஜக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் பாஜக மூத்த தலைவர் ஒருவர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திலும் புகார் தெரிவித்தார்.

தகுதி நீக்கம் செய்ய..

தகுதி நீக்கம் செய்ய..

அதில் அவர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளார் என்றும், எனவே அவரை எம். எல். ஏ பதவியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிடும் படியும் கூறியிருந்தார். இது தொடர்பாக இருதரப்பிடமும் தேர்தல் ஆணையம் விசாரித்து வந்த நிலையில், இறுதியாக இது குறித்த கோப்பினை அம்மாநில கவர்னருக்கு தேர்தல் ஆனையம் அனுப்பியது. தேர்தல் ஆணையம் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்து இருக்கலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எனினும், ஆளுநர் இது குறித்து எந்த அறிவிக்கையையும் வெளியிடவில்லை.

பதவி பறிபோகும் அச்சம்

பதவி பறிபோகும் அச்சம்

தேர்தல் ஆணையம் அளித்த அறிக்கைக்கு பிறகு ஜார்க்கண்ட் அரசியல் வட்டாரத்தில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. எப்படியும் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படும் என்று எதிர்க்கட்சியான பாஜக கூறி வருகிறது. இதனால் பதவி பறிபோகும் அச்சம் ஏற்பட்டுள்ளதால் ஹேமந்த் சோரன் சிக்கலில் தவித்து வருகிறார். இதன் காரணமாக தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எப்படி செய்யவேண்டும் என ஒருபக்கம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இன்னொரு புறம் குதிரை பேரத்தில் ஈடுபட்டு எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து பாஜக ஆட்சியை கவிழ்த்து விடும் என்ற அச்சமும் ஹேமந்த் சோரனை தொற்றிக்கொண்டுள்ளது.

குதிரை பேரத்தில் ஈடுபடும் பாஜக

குதிரை பேரத்தில் ஈடுபடும் பாஜக

இதனால், கடந்த சனிக்கிழமை, ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்களை ராஞ்சியில் இருந்து கந்தி நகருக்கு அழைத்து சென்றார். மூன்று பேருந்துகளில் எம்.எல்.ஏக்கள் கந்தி சென்றனர். ராஞ்சியில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள கந்தி நகரில் தங்க வைக்கபப்ட்டுள்ள எம்.எல்.ஏக்கள் சிலரை பாஜக தொடர்பு கொண்டு தங்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன ஆளும் கட்சி அவசர அவசரமாக எம்.எல்.ஏக்களை வேறு மாநிலத்திற்கு அழைத்து செல்ல முடிவெடுத்தது.

 ராய்பூருக்கு அழைத்து செல்கிறது

ராய்பூருக்கு அழைத்து செல்கிறது

ஜார்க்கண்டில் பாஜக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் உஷாரான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி, உடனே அனைத்து எம்.எல்.ஏக்களையும் சத்தீஸ்கார் மாநிலம் ராய்பூருக்கு அழைத்து செல்கிறது.. சத்தீஸ்காரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவதால், அங்கு சென்றால் எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்பதால் ராய்பூர் செல்வதாக கூறப்படுகிறது.

ரிசார்ட்டில் தங்க வைக்கப்படுகின்றனர்

ரிசார்ட்டில் தங்க வைக்கப்படுகின்றனர்

இன்று பிற்பகல் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஹேமந்த் சோரன் இல்லத்தில் இருந்து இரண்டு சொகுசு பஸ்களில் புறப்பட்டு சென்றனர். ராஞ்சிக்கு பேருந்தில் சென்ற எம்.எல்.ஏக்கள் அங்கிருந்து விமானம் மூலம் ராய்பூருக்கு புறப்பட்டுள்ளனர். ராய்பூரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட இருப்பதாக ஜார்க்கண்ட அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றன.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.