இந்தியாவில் முதல் முறையாக வாட்ஸ்அப் மூலம் முழு ஷாப்பிங் அனுபவத்தை ஜியோமார்ட் வழங்குகிறது.
இந்தியாவில் வாட்ஸ்அப் மூலம் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை ஆன்லைன் தளத்திற்குக் கொண்டு வர பல வருடங்களாக ஒரு பொதுத் தளத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக வாட்ஸ்அப்-ன் தாய் நிறுவனமான மெட்டா திட்டமிட்டு வருகிறது.
இதன் வெற்றியாக ஜியோமார்ட் வாட்ஸ்அப்-ல் தனது மொத்த வர்த்தகத் தளத்தையும் கொண்டு வந்துள்ளது.
10 நிமிடத்தில் டெலிவரி.. ஜியோமார்ட், பிக்பேஸ்க்ட்-க்கு சவால் விடும் க்ரோபரஸ்..!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 45வது வருடாந்திர கூட்டத்தில் அனைத்து வர்த்தகப் பிரிவுகளின் தற்போதைய நிலை, எதிர்காலத் திட்டம், புதிய திட்டங்களின் அறிமுகம் ஆகியவை பட்டியலிடப்பட்டது. இதில் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள வாட்ஸ்அப் – ஜியோமார்ட் திட்டம் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஜியோமார்ட்
இப்புதிய சேவை மூலம் ஒருவர் ஜியோமார்ட் ஆப் இல்லாமலேயே வாட்ஸ்அப் வாயிலாகப் பொருட்களைத் தற்போதைய விலையில் ஆர்டர் செய்யலாம். இதன் மூலம் யாருக்கு என்ன லாபம் என்று பார்க்கும் போது வியப்பு அளிக்கும் தகவல் கிடைத்துள்ளது.
யாருக்கு லாபம்..?
ஜியோமார்ட்-க்கு இப்போது வாட்ஸ்அப் வைத்துள்ள அனைவரும் வாடிக்கையாளர்கள் தான், சரி ஸ்மார்ட்போன் வைத்துக்கொண்டு வாட்ஸ்அப் இல்லாதவர்கள் எத்தனை பேர்..? மிகவும் குறைவு தான். இது ஜியோமார்ட்-க்கு ஜாக்பாட். இதேபோல் வாட்ஸ்அப் நிறுவனத்தின் பேமெண்ட் சேவையை விரிவாக்கம் செய்ய ஜியோமார்ட் முக்கியக் கருவியாக விளங்குகிறது.
வாட்ஸ் அப்-ல் ஜியோமார்ட்
வாட்ஸ் அப்-பைப் பயன்படுத்தி ஜியோமார்ட்-டில் எப்படி ஆர்டர் செய்யலாம் என்பதை இப்போது பார்ப்போம்
1. உங்கள் மொபைலில் முதலில் ஜியோமார்ட்-ன் எண்ணை +917977079770 சேமிக்க வேண்டும் அல்லது இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும். https://www.whatsapp.com/catalog/917977079770/?app_absent=0
2. இப்போது, இந்த எண்ணுக்கு “HI” என்று அனுப்பவும்.
3. பின்னர், “Get Started” என்பதைக் கிளிக் செய்யவும்.
4. இப்போது, “view Catalog” என்பதைக் கிளிக் செய்யவும்.
5. நீங்கள் இப்போது பழங்கள் மற்றும் காய்கறிகள், பிற உணவு பொருட்கள், பிராண்டட் உணவுகள் மற்றும் பல போன்ற பல்வேறு வகையான தயாரிப்புகளைப் பார்க்க முடியும்
கார்ட் டூ முகவரி
6. ஒரு பொருளை உங்கள் Cart-ல் சேர்க்க, அதற்குப் பக்கத்தில் உள்ள + குறியைக் கிளிக் செய்யவும்.
7. தேவையான அனைத்து தயாரிப்புகளையும் சேர்த்தவுடன், “Send to Business” என்பதைக் கிளிக் செய்யவும்.
8. இப்போது, “Provide Address” என்பதைக் கிளிக் செய்யவும்
9. பின்னர், தயாரிப்புகள் வழங்கப்பட வேண்டிய முகவரியைத் தேர்ந்தெடுத்து, “Send Address” என்பதைக் கிளிக் செய்யவும்.
10. பின்னர், உங்கள் முகவரியை உறுதிப்படுத்த “Confirm” என்பதைக் கிளிக் செய்யவும்.
பேமெண்ட்
11. உங்கள் முகவரியை மாற்ற விரும்பினால், “முகவரியைச் சேர்/மாற்று” என்பதைக் கிளிக் செய்யவும்.
12. இப்போது, உங்கள் தயாரிப்புகளுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும்.
13. கேஷ் ஆன் டெலிவரி, ஜியோ மார்ட்டில் பணம் செலுத்துதல் மற்றும் வாட்ஸ் அப்-பில் பணம் செலுத்துதல் ஆகியவற்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.
14. நீங்கள் கட்டணத்தை முடித்தவுடன், ஆர்டர் உறுதிசெய்யப்படும், மேலும் திட்டமிட்டபடி அதைப் பெறுவீர்கள்.
How to Place an Order on Jiomart using Whatsapp? First End-End Shopping Experience
Jiomart- Whatsapp Partnership to End-End Shopping Experience: RIL AGM 2022: WhatsApp-JioMart Partnership Announced; Check Out the Step-by-Step Guide to Order Groceries From Online Store.