\"பிரார்த்தனைக்கு சக்தி உண்டு“..பாரதிராஜாவை நேரில் சந்தித்த ராதிகா சரத்குமார் ட்விட்!

சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜாவை ராதிகா சரத்குமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர் பாரதிராஜா, தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். சமீபத்தில் இவர் விருமன் இசைவெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டு பேசினார்ல.

இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து, அங்கேயே ஒரு நாள் தங்கியிருந்தார்.

பாரதி ராஜா

பின் சென்னை திரும்பிய அவர், நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்த நிலையில், மீண்டும் அவருக்கு உடல் நிலை கோளாறு ஏற்பட்டதை அடுத்து,சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அருக்கு நீர்ச்சத்து குறைபாடு இருப்பதால் மருத்துவர்கள் அவருக்கு ஓய்வு தேவை என்று அறிவுறுத்தி இருந்தன.

மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்

மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்

இதையடுத்து குடும்பத்தினர் ஆலோசனைப்படி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இயக்குநர் பாரதிராஜா மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் அப்பாவின் உடல்நிலை இப்போது நன்றாக இருக்கிறது என்று மகன் மனோஜ் தெரிவித்திருந்தார்.

நலம் பெற்று வருகிறேன்

நலம் பெற்று வருகிறேன்

இயக்குநர் பாரதிராஜா தரப்பில் அறிக்கை ஒன்று வெளியானது அதில், உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.விரைவில் சந்திப்போம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பிரார்த்தனைக்கு சக்தி உண்டு

பிரார்த்தனைக்கு சக்தி உண்டு

இந்நிலைகள் இன்று இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் நடிகை ராதிகா சரத்குமார், இதுகுறித்து தனது ட்விட்டரில் “பிரார்த்தனைக்கு சக்தி உண்டு, வைப்ரேஷங்களும் உள்ளன. இன்று எனது இயக்குனரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அவர் குணமடையும் பாதையில் இருக்கிறார். எப்போதும் நான் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நபர் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை பார்க்க சகிக்கவில்லை. பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் எம்ஜிஎம் மருத்துவமனையின் கவனிப்புக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.