குரங்கம்மைக்கு தடுப்பூசிகளை தயாரிக்க 11 மில்லியன் டாலர் நிதி அறிவித்த அமெரிக்க அரசு..!

குரங்கம்மை நோய்க்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிக்கு 11 மில்லியன் டாலர் நிதி வழங்க உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

டென்மார்க்கைச் சேர்ந்த பவேரியன் நார்டிக் நிறுவனத்தின் ஜைன்னியோஸ் என்ற தடுப்பூசியை தயாரிக்க நிதி வழங்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக அந்நிறுவனத்திடம் இருந்து 30 லட்சம் டோஸ்களை ஆர்டர் செய்த அமெரிக்கா, ஜூலையில் கூடுதலாக 25 லட்சம் டோஸ்களை கேட்டுள்ளது.

உலகளவில் குரங்கம்மை பாதித்தோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 600-ஐ கடந்த நிலையில், அமெரிக்காவில் மட்டும் அந்நோய் பாதிப்பு சுமார் 17 ஆயிரம் பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.