பாஜகலின் அடுத்த தலைவர் யார்?- மோடி, அமித் ஷாவின் சாய்ஸ் இவர்தான்!

பாஜகவின் தேசிய தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவின் மூன்று ஆண்டு பதவிக் காலம் 2023 ஜனவரி மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து கட்சியின் புதிய தலைவராக யாரை தேர்ந்தெடுப்புது என்பது குறித்த ஆலோசனையில் பிரதமர் மோடி. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிர இறங்கி உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் விதிமுறைப்படி ஒரு நபர் அதிகபட்சம் இரண்டு முறைதான் தலைவர் பொறுப்பை வகிக்க முடியும் என்பதால் ஜே.பி.நட்டாவுக்கு மீண்டும் ஒருமுறை தலைவராகும் வாய்ப்பு கிடைக்கலாம் அல்லது கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை கருத்தில் கொண்டு, நட்டாவின் தலைவர் பதவி காலத்தை மேலும் ஓராண்டுக்கு மட்டும் நீட்டிக்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.

இந்த இரண்டு வாய்ப்புகளிலும் ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

மத்திய கல்வி துறை அமைச்சராக உள்ள தர்மேந்திர பிரதானை பாஜகவின் புதிய தலைவராக நியமி்க்கலாம் என்று பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவரே பாஜகவின் அடுத்த தலைவராக அதிக வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.